Wednesday, 22 November 2023

பிரபஞ்ச மேஜிக்

   

பிரபஞ்ச மேஜிக்

உங்கள் வாழ்க்கை முழுவதும் இந்த பிரபஞ்சம் உங்களுக்கு பதிலளித்து கொண்டே இருக்கிறது.. 

உங்களை சுற்றியிள்ள அனைத்தையும் குறித்து விழிப்புணர்வுடன் இருங்கள்... 

ஒவ்வொரு வினாடிக்கும் இந்த பிரபஞ்சம் பதிலளித்து கொண்டே இருக்கிறது. 

எந்தெந்த வழிகளில் வரும் என்று யாராலும் சொல்ல முடியாது.. கணக்கில் அடங்காத வழிகள்..அதை கண்டுபிடிப்பது , எண்ணுவது உங்கள் வேலை அல்ல..

 . 

மற்றவர்கள் டைம்லைனில் போஸ்ட் அல்லது ஷேர் செய்யப்பட்டதாக இருக்கலாம், லாரி அல்லது ஆட்டோ பின்னே எழுதப்பட்ட வாசகமாக இருக்கலாம்.. நீங்கள் கேட்கும் பாட்டாக இருக்கலாம், முதலிய....இப்படி கணக்கில் அடங்காத வழிகள். 

நீங்கள் எதிர்பார்த்தால் இந்த பிரபஞ்ச மேஜிக்கை உணர முடியாது..எதிர்பார்ப்பு இல்லாமல் கண்ணில் படும் / காதால் கேட்கும் விசயங்கள் தான் உங்களுக்கான மேஜிக் 

.

 நீங்கள் இதை உணரும்போது தனி ஒருவன் படத்தில் வருவது போல கடைசிபக்கத்தில் உள்ள குட்டி செய்திக்கும், தலைப்பு செய்திக்கும் சம்பந்தம் இருப்பது போல உங்கள் கண்ணில் படும் முதல் விசயத்திற்கும், அடுத்த விசயத்திற்கும் தொடர்பு இருக்கும்..

 .நீங்கள் விழிப்புணர்வுடன் சிந்தித்தால் உங்கள் எதிர்பார்ப்பு இல்லாமல் கண்ணில் படும் சின்ன சின்ன விசயங்கள் கூட உங்களுக்கான விடையாக அல்லது நீங்கள் சாதிப்பதற்கு ஒரு சந்தர்ப்பமாக இருக்கலாம்.

 . 

சில நேரங்களில் இவற்றை செய் அல்லது இங்கே செல் என்று பிரபஞ்சம் உங்களை மனதை தூண்டும்..

 . 

கவலை அல்லது பயம் வேண்டாம், பிரபஞ்சம் உங்களுக்கு எப்போதும் நல்லனவற்றையே கொண்டு வரும்.. ஆதலால் தயக்கம் வேண்டாம்.. 

அவற்றை நீங்கள் செய்யும்போது அங்கே உங்களுக்காக பல அற்புதங்கள் காத்து கொண்டிருக்கும்...

 . 

உங்கள் குழப்பத்திற்கு விடையாக இருக்கலாம். (அல்லது) நீங்கள் மனதால் கேட்ட கேள்விக்கு விடையாக இருக்கலாம். (அல்லது) நீங்கள் அடுத்த செய்ய வேண்டியதாக கூட இருக்கலாம்.

 .

 இந்த பிரபஞ்சம் காரணமில்லாமல் ஒரு விசயத்தை உங்கள் கண்முன் கொண்டுவருவதில்லை. 

இந்த பிரபஞ்சம் அனுப்பும் சிக்னல்களை சரியாக புரிந்துகொள்பவர்களே சிகரத்தை அடைகின்றனர்..

.

நீங்களும் சிகரம் தொட வாழ்த்துக்கள்...     

No comments:

Post a Comment