நினைவுகள் வெறும் சுமைகளே பேசாலைதாஸ்
கடந்த கால நினைவுகளை எல்லாம் தூக்கி எறிந்து விட வேண்டும்.
அப்போதைக்கு அப்போது நிகழ்காலத்தில் தான்
வாழ வேண்டும் என்று சொல்கிறீர்கள்.
ஆனால்,
இந்த உலகில் செயலாற்ற
ஒருவனுக்கு வலுவான
மன நிலையும்,
கடந்த கால நிகழ்வுகளின்
அனுபவ பாடமும்,
செறிந்த திறமையான நினைவாற்றலும் தேவைப்படுகிறது.
இது,
உங்களது வார்த்தைக்கு முரண்பாடாக தெரிகிறதல்லவா ?
ஓஷோ :
" பிரேம் குமார்,
எந்த விதமான முரண்பாடும் இதில் இல்லை.
தவறான புரிதல் மட்டுமே உன்னிடம் உள்ளது.
கடந்த கால சிந்தனைகளை எல்லாம் தூக்கி எறிந்து விட வேண்டும் ' என்ற வார்த்தையின் உண்மையான அர்த்தம்
அதை அழித்து விட வேண்டும் என்பதல்ல.
அதை அழிக்கவும் முடியாது.
ஆனால்,
நீங்கள் அனைவருமே எப்போதும் அந்த கடந்த கால நினைவுடனே வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
அதனால்,
நிகழ்காலத்தை தவற விட்டு விடுகிறீர்கள்.
உங்கள் எண்ணம் முழுவதும்
கடந்த கால
சிந்தனையிலும்,
எதிர்கால கற்பனைகளிலுமே சென்று கொண்டிருக்கின்றன.
நீங்கள் அனைவரும் இங்கு அமர்ந்து கொண்டு எனது உரையை கேட்டு கொண்டிருப்பது போல் தோற்றமளிக்கிறீர்கள்.
ஒரு ஆர்வத்தில் இங்கு வந்து அமர்ந்து விட்டீர்கள்.
ஆனால்,
உங்களது மனம் இங்கே இல்லை என்பது எனக்கு தெரிந்ததுதான்.
உங்கள் வீட்டில் தனியே
உங்கள் அம்மாவிடம் விட்டு விட்டு வந்திருக்கும் உங்களது குழந்தையை பற்றிய சிந்தனை
அல்லது,
வீட்டில் இருக்கும் உங்களது
கணவன் / மனைவி யை பற்றிய சிந்தனை,
அவர் காப்பி சாப்பிட்டிருப்பாரா, இல்லையா ?
அவருக்கு
ஒரு வெந்நீர் (hot water ) கூட
போட்டுக் கொள்ள தெரியாதே.' என்ற சிந்தனை
இது போன்ற சிந்தனையில்
ஒவ்வொறு நிமிடமும் இருப்பதுதான் கடந்த காலத்தில் வாழ்வது என்பது.
இது தேவையற்றது.
அதற்கு நீங்கள் வீட்டிலேயே இருந்து இருக்கலாம்.
அப்போது கூட
உங்களது மனம் வேறு விதமான
சிந்தனையில்தான் இருக்கும்.
வாழ்க்கை என்பது முற்றிலும்
நிகழ்காலமே.
வாழ்க்கையில் கடந்த காலம் என்பது இழந்து விட்ட நேரம்.
எதிர்காலம் என்பது நிச்சயமில்லாதது.
மனம் மட்டும்
தேவை இல்லாத இந்த இரண்டிலும் உங்களை சுழற்றியபடியே வைத்திருக்கிறது.
சற்று விளக்கமாக பார்ப்போம்.
மனித மூளை என்பது,
மருத்துவ விஞ்ஞானிகள்,
மனோ தத்துவ பேராசிரியர்கள் அனைவரும் இன்று வரை வியந்து போகிற அளவிற்கு செயலாற்றும் ஒரு இயந்திரம்.
உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு ஏற்படுகிற
எண்ணங்களையும்,
செயல் நிகழ்வுகளையும்
ஒலி நாடாவை போல்
தன்னுள் பதிவு செய்தபடியே இருக்கிறது நமது மூளை.
நூறு ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த ஒருவரின் மூளையை ஆராய்ந்து பார்த்ததில்,
அவரது ஒரு நூறாண்டு
கால பதிவும்,
மூளையின் ஒரு சின்ன இடத்தில் மட்டுமே பதிவாகி இருந்ததையும்,
மூளையின் பெரும்பகுதி
உபயோக படுத்த படாமல்
வெறுமையாக (fresh ) இருந்ததை கண்டு வியந்து போனார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
மனம் என்பது,
மூளையில் பதிந்த எண்ணங்களுடன் கலந்து,
அதை எடுத்து வந்து,
உங்களுக்கு செயல் வடிவத்தை கொடுக்கிறது.
மூளையை சிந்திக்க விடுவதில்லை உங்களது மனம்.
ஞாபக மறதி அதனால்தான் ஏற்படுகிறது
மனம் மூளையோடு இணைவது என்பது தவிர்க்க முடியாத இயற்கை நிகழ்வு
மனப் போராட்டம் ' என்று ஒரு வார்த்தையை அனைவரும்
அவ்வப்போது சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்.
அந்த தேவை இல்லாத போராட்டம் இதனால்தான் நிகழ்கிறது.
ஆனால்,
இந்த இயற்கை நிகழ்வே,
வாழ்க்கை அல்ல.
இயற்கை உங்களுக்கு
ஒரு கேடயத்தை கொடுத்திருக்கிறது.
அதுதான் ' விழிப்புணர்வு '
அது
மனித மூளையில் பிறப்பது.
அறிவை சார்ந்தது.
அது கடந்து கால நிகழ்வின்
எண்ணங்களில் வாழ்ந்து கொண்டிருப்பதில் எந்தவிதமான பிரயோஜனமும் இல்லை என்பதை உங்களுக்கு சொல்லிக் கொடுக்கும்.
உங்களது வாழ்க்கையை வீணடிக்க விடாது.
கடந்த கால நிகழ்வுகளில் உங்களுக்கு தேவையான அனுபவப் பாடங்களை மட்டும் அது பதிவு செய்து வைத்திருக்கும்.
தகுந்த நேரத்தில்
அந்த அனுபவ பாடங்களை உங்களுக்கு உணர்த்தி,
உங்களை அதிகத் திறமை உள்ளவர்களாக மாற்றிவிடும்.
நீ அப்போதைக்கு அப்போது
உஷாராக,
விழிப்புணர்வுடன் இருந்து,
கடந்த கால நினைவுகளை பெரும் பாரமாக சுமக்க அனுமதிக்காமல் இருந்தால்,
அதிக திறமை வாய்ந்தவராக,
கவலை என்பது இல்லாமல்
வாழலாம்.
இது உறுதி. ' நினைவுகள் வெறும் சுமைகளே '

No comments:
Post a Comment