விடை நீதான்! பேசாலைதாஸ்
ஆசையே அலை போலே, நாம் எல் லாம் அதன் மேலே, ஆடிடும் ஓடம் மனித வாழ்வு மாறிப்போய்விட்டது. துன்பத்தில் பிறந்து, துன்பத்தில் வாழ்ந்து மடிவதற்காகவா மனிதன் படைக்கப்பட்டான்? அப்படியென் றால், நான் படைத்தவனை சபிக்கி ன்றேன். அப்படி நான் சபிக்கபோவ தில்லை. ஆண்டவன் அரிய நெஞ்ச் சில் ஒரு துளி வஞ்சம் இல்லை, ஆனாலும் மனிதன் நான் விடை தெரியாமல் மயங்குகின்றேன். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. உங்களு க்கும் புரியாமல், அது பற்றி சிந்திக்காமல் தப்பிக்கலாம் என நினைக்கி ன்றீர்கள். வாழ்வின் யதார்த்த நிலை பற்றி சிந்திக்க முற்பட்டால், மரணத் தில் அது முடிவு பெறுகின்றது. மனிதன் மரணத்தை கண்டு அஞ்சுகின் றான். இருக்கத்தான் நாம் ஆசைபடுகின்றோம், ஆனாலும் இல்லாமல் போகின்றோமே? அது ஏன்?
மனிதர்கள் மேலும் மேலும் துன்பப் படுபவர்களாகவே ஆகிக் கொண்டி ருப்பது ஏன் ? அதன் காரணம் என்ன விடை நீதான்! " துன்பத்திற்கான காரணம் மிக எளிது. மிக வெளிப்ப டையானது. அந்த காரணம், துன்ப ப்படுபவர்களின் அருகில் நெருக்க மா கவே உள்ளது. அது எளியது என் பதாலும், அருகிலேயே இருப்பதாலும் துன்பப்படுவோர் அதனை கண்டு கொள்வதில்லை. மனித இனம், இன்று மட்டுமா துன்பப்படுகிறது ? அது எப்போதுமே துன்பப்பட்டு கொண்டு தான் இருக்கிறது. துன்பப்படுவது என்பது, மக்களின் இயற்கை குணங்க ளில் ஒன்றாகவே ஆகிவிட்டது. அவர்கள் நம்பிக் கொண்டிருக்கிற, மதிப்பு டன் வணங்குகிற, மதங்களும், பக்திநூல்களும், இதிகாசங் களும் மனித னின் துன்பங்களை அழிப்பதற்கு பயன்பட வில்லை.
அதற்கு மாறாக, மனிதனுக்கு கீழ் கண்ட வாறு ஆறுதல் கூறுகின்றன. ' அரசு அதிகாரமும், உல்லாசமும் கைக்கு வர வேண்டிய அதே கணத்தில் கை நழுவிப் போய், காட்டிற்கு செல்ல வேண் டிய துன்பம் இறைவனுக்கு வருகிறது. அவன் அதை பெரிதாக நினைக்க வில்லை. ஆனந்தமாக ஏற்றுக் கொள்கிறான். நீங்களும் உங்களது துன்பங் களை பெரிதாக நினைக்காதீர்கள். ஏற்றுக்கொள்ளுங்கள். நம்மை காக்க வந்த ஆண்டவர், கடுமையாக தண்டிக்கப்பட்டு சிலுவையில் அறையப்பட் டார். அவரது பெரிய துன்பத்தை நினைத்து, உங்களது துன்பத்தில் ஆறு தல் கொள்ளுங்கள்.
மனிதர்களே, நீங்கள் படுகிற துன்பத்திற் கெல்லாம் காரணம் நீங்கள் அல்ல. அன்று ஆதாம் ஏவால் செய்த முதல் பாவமே காரணம். முற்பிறவியில் பலாபலன். இவ்வாறாக அனைத்து மத ங்களும் துன்பத்தை அங்கீகரிக்கின்றன. அதற்கு ஆறுதல் அளிக்கின் றன. துன்பத்திற்கான காரணத்தை உங்களுக்கு சொல்லாமல், அவற்றை, அழகான விளக்கங்களை கொடுத்து, மூடி மறைத்து விடுகிறார்கள் மத வாதிகள். அதனால், மனிதர்களின் துன்பம் தொடர்கதையாகிப் போகி றது.
நான் இப்போது சொல்கிறேன். உங்களது அனைத்துத் துன்பத்திற்கும் முழுமையான காரணம் நீங்கள் மட்டும்தான். அந்த காரணம், உங்களுக்கு தெரிந்ததாக வெளிப்படையாகவும் இருக்க லாம். தெரியாமல், மர்மமாகவும் இருக்கலாம். ஆறுதல் அடைவதோ, அடுத் தவர்கள் மீது பழி போடுவது, முன் பிறவி பாவம் என்பது இவை அனைத் துமே தேவை இல்லாத வீண் காரணங்கள். நீங்கள் தீக்குள் விரலை வைத் தால், அடுத்த பிறவியில் பிறக்க போகிறவர்களுக்கு சுடுமா ? அந்த சமயத் தில், உங்கள் அருகில் இருப்பவர்களுக்கு கூட சுடாது. தீயில் கை வைப்பவ ர்கள் மட்டுமே, அதன் துன்பத்தையும் அனுபவிக்க வேண்டும்.
நீ...துன்பத்திற்கான காரணத்தை கேட்டிரு க்கிறாய். அனைத்து துன்பத்திற்கும் பொதுவான காரணங்களை சொல்லி விட முடியாது. ஆனால், புத்தர் சொன்னார். ' ஆசைதான் துன்பத்திற்கு காரணம் ' என்றார். உண்மைதான். அவர் வாழ்க்கையை துறந்தவர். அவ ரைப்போலவே துறவியாகும் ஆசையுள்ள தனது சீடர்களுக்கு அப்படி சொன்னார். ஆனால், இல்லற வாழ்க்கை என்பது ஆசையை விதையாகக் கொண்டது. அந்த விதையிலிருந்து துன்பங்கள் வளரதான் செய்யும். ஆறு தலடைவதோ அடுத்தவர்களை காரணம் காட்டுவதையோ மறந்து விட்டு நீ உள் முகமாக நகர்ந்து செல்வதால் மட்டுமே உன் துன்பத்திலிருந்து விடுத லையடைய முடியும்.
நான் மத குருவாக மாற ஆசைப்பட்டேன், எனக்குள் எழுந்த தத்துவ விசாரனை, பல்கலைக்கழகத்தில் நான் சிறப்பு கற்கை நெறியக நான் தேர்வு செய்த மார்க்ஸீச அரச அறிவியல், அரசியல் அடிமைத்தனத்திற்கு எதிராக ஆயுதம் தூக்கி, வன்முறையில் ஈடுபடவைத் தது. போராட்ட குழுக்களுக்குள் எழுந்த குருட்டாட்டம், எனது போராட்ட குணத்தை நீர்த்துப்போக வைத்தது, வேறு வழியில்லாமல் இல்லற வாழ் வில் பிரக்ஞையற்று இறங்கினேன், வாழ்வின் கடமையாக அதை ஏற்று, கடமை புரிவதகா, யாகம் நடத்தி, கடமைகளை ஓரளவு சரியாக நடத்திக் கொண்டு இருக்கின்றேன். ஆனாலும் பேரின்ப பெருவாசலை அடை வேனா? அது எங்கே இருக்கின்றது என கவலை என்னை விட்டபாடில்லை. நான் வாழ்வின் துன்பங்களை அதிகமாக சுமந்தவன் இல்லை, நகைச் சுவை ரசனை, கலை ரசனையை எனக்குள்ளே நானே வளர்த்துக்கொண்டு வாழ்வை வாழப்பார்க்கின்றேன். ஆனாலும் ஏதோ கவலைக்கடலில் நீந்து வதாக ஒரு பிரேமை! உங்களுக்கும் அது இருக்கலாம்.
நல்லவேளை நான் செய்த பிராப்தமோ தெரியாது, நான் ஒரு கிறிஸ்தவனாக பிறந்தது. நான் ஓரளவு எல்லா மதங்களை படித் திருக்கின்றேன். கிருஸ்ணரோ, புத்தரோ, முகம்பது நபியோ, சிவனோ யாரும் மனிதன் படும் துன்பங்களுக்கு இறைவனும் ஒரு காரனம், என்ற தார்மீக பொறுப்பை ஏற்றுக்கொண்டு, அந்த பாவத்தை இறைவன் மனித னாக அவதாரம் எடுத்து, அந்த பாவப்பழியை தான் ஏற்றுக்கொண்டு அதற்கான ஒட்டு மொத்த துன்பத்தையும், மரணத்தையும் ஏற்றுக்கொண்ட ஒரு தெய்வம் இயேசுவை விட இருந்தால் சொல்லுங்கள், நான் அதை பின்ப ற்றுகின்றேன். நம் கவலைகளுக்கு நாமே விடை அந்த விடை, என் இயேசு தெய்வத்திட்மே உண்டு. அன்புடன் பேசாலைதாஸ் பேசாலைதாஸின் ஞான வேட்டை தொடரும்,,,,,,,,,,

No comments:
Post a Comment