Wednesday, 13 December 2023

புல் தானாகவே வளர்கின்றது

புல் தானாகவே வளர்கின்றது பேசாலைதாஸ் 


" எப்போதுமே இயற்கை தன்னை சம நிலையில் வைத்திருக்கும்.

அதன் பிரதிபலிப்பான

நம்மையும் தான்.

அன்பு போன்ற

 ஆக்க பூர்வமான உணர்வுகள் ஒருவனிடம் பொய் வேடம் போட்டிருந்தால்,

அவனது வாழ்க்கையை அசிங்கமாக மாறிவிடும்.

ஒரு குழந்தையின்

 இயல்பு நிலை என்பது,

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்தான்.

இருப்பினும், 

அதன் கோபம் கூட யாருக்கும் கெடுதல் செய்யாது.

குழந்தையை இயல்பு நிலையில் வளர்த்தோம் என்றால்,

அதன் வாழ்வில்,

அதற்கு தோல்வி என்பதே கிடையாது.

எந்த ஒரு செயற்கையான பயிற்சியும் அதற்கு

தேவை இல்லை.

 பொம்மை விற்கும் கடைக்கு சென்ற ஒருவர்,

தனது 15 வயது மகனுக்கு

ஏதேனும் பொம்மைகள் இருக்குமா என்று விசாரித்தார்.

பொம்மை கடைக்காரர்,

ஒரு காரின் உதிரி பாகங்கள் 

அடங்கிய பெட்டியை அவரிடம் கொடுத்தார்.

' 15 வயது மகனுக்கு ஏற்ற பொம்மை இதுதான்.

ஒரு காரின் உதிரி பாகங்கள்

இதில் இருக்கிறது.

அவற்றை சேர்த்து 

ஒரு காரை வடிவமைக்கலாம்.' என்றார்.

அதை வாங்கி சென்ற 

அந்த தந்தை,

இரண்டு நாட்கள் கழித்து

மீண்டும் அந்த பொம்மை கடைக்கு அதே பெட்டியுடன் வந்தார்.

' இந்த பெட்டியில் உள்ள காரின் உதிரி பாகங்கள் சரியில்லை.

ஒன்றாக இணைத்து 

ஒரு காரை உருவாக்க முடியவில்லை.

ஒரு பாகத்தை இணைக்கும் போது,

முன்பு இணைத்த 

வேறு ஒரு பாகம்

கழண்டு கீழே விழுந்து விடுகிறது.

அதனால்,

வேறு நல்லதாக ஒன்றை மாற்றி கொடுங்கள் ' என்றார்.

அதற்கு அந்த பொம்மை கடையின் மேனேஜர்,

' உண்மைதான்.

இதை யாராலும் பொருத்த முடியாது.

எதுவும் ஒன்றுடன் ஒன்று பொருந்தாது.

இதன் உதிரி பாகங்கள் அப்படிதான் வடிவமைக்கப் பட்டுள்ளது.

இந்த நாகரீக உலகில்,

வாழ்வின் நிகழ்வுகள்

எதுவும் ஒன்றுடன் ஒன்று பொருந்தி வருவதில்லை.

எந்த உறவும் எவருடனும் 

பொருந்துவதில்லை.

அதற்கு பையன்களை

இப்பொழுது இருந்தே 

தயார் செய்ய வேண்டும் அல்லவா ?

அதனால்தான் அந்த பொம்மை இப்படி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ' என்றார்.

இந்த வாழ்க்கையில்,

நீங்கள் எதை செய்தாலும்,

இயற்கையாகவே

எது நடந்தாலும் 

பெரும்பான்மையான நிகழ்வுகள்

விரக்தியில் தான் 

போய் முடிகின்றன.

ஆனால்,

ஒரு குழப்பமான,

விரக்தியான சூழ்நிலையை,

உங்கள் அறிவு கூர்மையாய் சரி செய்து விடலாம்.

ஆனால்,

அறிவால் இயற்கையாக வளரும் குழந்தைகளை

பெற்றோர்கள்,

தங்கள் மனதால்,

 வளர்த்து விடுகிறார்கள்.

இவைதான் அனைத்து 

குழப்பமான நிகழ்வுகளுக்கும் காரணம்.

No comments:

Post a Comment