Tuesday, 23 January 2018

உன்னை முதலில் நேசி!

உன்னை முதலில் நேசி!
உன்னையறிந்தால், உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம் என்றார்கள். உன் நேசிக்குமாப்போல பிறரை நேசி என்றார் இயேசு பிரான். முதலில் உன்னை நீ நேசி, பின்னர் உலகம் உன்னை நேசிக்கத்தொடங்கும் என்றார்கள் தத்துவஞானிகள். என்னை எப்படி நேசிப்பது என்பதில் குழப்பிப்போன ஒருவன், ஒரு ஞானியிடம், என்னை நான் எப்படி நேசிப்பது என்று கேட்டான்.அதற்கு அந்த ஞானி, நீ ஒருவன் மீது ஆத்திரப்பட்டால், அல்லது கடுங்சினம் கொண்டால், முதலில் பாதிக்கப்படுவது யார்? என்று கேட்டார். அதற்கு அவன் சட்டென்று நான் தான் முதலில் பாதிக்கப்படுவேன் என்றான். அதற்கு ஞானி  நீ மிகச்சரியாக சொன்னாய்!, முதலில் நீ கோபம், ஆத்திரம் இப்படிப்பட்ட நேர்மறையான பண்புகளில் இருந்து விலகிக்கொள்ள, அன்பு,மகிழ்ச்சி, நிறைவு இப்படியான நேரான எண்ணங்களினால் உன் மனதை நிரப்பு பின்னர் உன்னை நீயாகவே அன்பு செய்ய தொடங்கிவிடுவாய்! என்று ஞானி சொன்னார்.
                                            நம்மில் பலர் தன்னை நேசிப்பது எப்படி என்று தெரி யாமல் தவிக்கின்றனர். நம்மை நாம் நேசித்தால்தானே, நாம் படைக்க ப்படுவதற்கு மூலகாரனமான மெய்ப்பொருளை கண்டு கொள்ளமுடியும். என்னை நான் முதலில் அறிந்து கொள்ளாமல், விட்டுவிட்டு எப்படி பரம் பொருளான மெய்ப்பொருளை கண்டுணர்வது?    நம்மை நாம் அன்பு செய்ய தயங்குவதற்கு பல காரனம் நம்மை அறியாமல் நமக்குள்ளே இரு க்கின்றது.   நம்மை நாமே குறைவாக மதிப்பிடுவது, குறைவாக கனிப்பி ட்டு, தாழ்வு என்கின்ற மனநிலையை வளர்த்து விருட்ச‌மாக்கியுள்ளோம்.
எதற்கெடுத்தாலும், அதனை செய்யும் ஆற்றல் எனக்கு உண்டா? என்ற கேள்வி எழுப்புவதும், அதனை செய்ய நான் தகுதியானவனா? என்று சிந்திப்பதும் நமக்குள் இருக்கும் தன்னம்பிக்கையை சிதறடிக்கின்றது. தீர்வுகளையும், விளைகளையும் பற்றி எண்ணாமல், ஒரு காரியத்தை செய்வதால் வரும் பிரச்சனை பற்றியும், அதானல் வரும் சாவால்களுக்கு எப்படி முகம் கொடுப்பது என்று எண்ணைப்பார்க்காமல் இனம் புரியா அச்சத்தில் மூழ்கி செயல்படாமல் முடங்கிவிடுகின்றோம்.  சாதனையா ளர்களை பார்த்தால், அவர்கள் எல்லோருமே சராசரி மனிதர்களாக இரு ந்து சாதனை படைத்தவர்களே!       நான் கட்டையாக இருக்கின்றேனே என எண்ணுகின்றாயா? மாவீரன் நெப்போலியனைப்பார்! தேசியத்த லைவன் பிரபாகரனைப்பார்! அழகு குறைந்த, கவர்ச்சியற்றவனாக எண்ணுகின்றாயா? தனது அவலட்சனத்தையே மூலதனமாக கொண்ட எத்தனையோ சாதனையாளர்கள் இருக்கின்றார்கள். ஊணமுற்றவ்ன் என உணர்கின்றாயா? ஊணமுற்ற பலர் உலகத்தை திரும்ப பார்க்க வைத்த கதை ஏராளமுண்டு.  
                                                                உன்னையே நீ முதலில் நேசிப்பதற்கு மிக இலகுவான வழி, முதலில் உன்னை நீ அறிதல், நம்மை நாம், அறிவதற்கு தடைக்கல்லாக இருப்பது நான் என்ற அகங்கார உணர்வே! "எழுத்துச் சித்தர் பாலகுமாரன்” அவர்களால் எழுதப்பெற்ற "நல்ல முன் பனிக்காலம்" என்ற அற்புதமான நாவலில் உள்ள கீழ்க்கண்ட இந்த கருத்துக்கள் என் சிந்தை கவர்ந்தவை. என்று திரு, ரவிச்சந்திரன் அவர்கள் பதிவு செய்ததை அப்படியே தருகின்றேன்.

,,,,,,,,தான், பிறர் என்ற பேதம் உச்சகட்டத்தில் தலைதூக்குகிறபோது, தான் மற்றவரைவிட எல்லாவிதத்திலும் உயர்வு என்று அகங்காரம் வருகிறபோது, அந்த அகங்காரம் அதிகமாகிறபோது, அந்த அகங்காரத்தால் தனிமைப்பட நேருகிறது. 
அப்படி தனிமைப்பட்டபோது தான் யார் என்கிற கேள்வி பெரிதாகிறது. தான் என்பது மனசா, உடம்பா என்று ஆராய முற்படுகிறது. தன் மனதை உற்று பார்க்கத் துவங்கி விடுகிறது.

எண்ணங்கள் இடைவிடாது தோன்றிக் கொண்டிருக்கிற நிலையை, இடத்தை உற்றுப் பார்க்கிறது. எண்ணங்களை உற்றுப் பார்க்க, எண்ணங்கள் தோன்றுவது நிதானப்படுகிறது.

மனம் செயல்படுவதை ஸ்லோமோஷன் படம் போல காண முடிகிறது. அப்போது ஒரு எண்ணத்திற்கும் இன்னொரு எண்ணத்திற்கும் இடைவெளி இருப்பதை கண்டு கொள்ள முடிகிறது.

ஒரு எண்ணம் தோன்றி அடுத்த எண்ணம் தோன்றுவதை நிறுத்திய பிறகு அந்த இடைவெளி பெரிதாகிறது. எண்ணம் எதுவுமில்லாத, அதே சமயம் இடைவெளியை தான் என்று உணருகிற நிலை வருகிறது.

எண்ணம் எதுவுமில்லை. ஆனால், அதே சமயம் தான் என்ற நிலைமை உண்டு.

ஒருமுறை தெரிந்துவிட்டால் இந்த சுற்றுப்புறம் எல்லாம் மறந்து இந்த தானில் அடிக்கடி மனம் லயிக்கும். தான் என்கிற எண்ணமில்லாத இடைவெளியிலேயே லயித்து கிடக்கும். அதையும் ஆராய்ந்து பார்க்கும்.

சூடு இல்லாத ஒளியும், வடிவமில்லாத சக்தியுமாய் எந்த உவமானமும் வைத்துச் சொல்ல முடியாததாய் எப்படி எல்லாம் விளக்கினாலும் மற்றவர்க்கு, பிறருக்கு புரியாத விஷயமாய் விளக்க வேண்டிய அவசியமே இல்லாத வெறும் அனுபவமாய் அங்கே கிடக்கும். 

நான் யார் என்று நீ தெரிந்து கொள்ளும் நிலை வரும் போது, நீ நீயாக இல்லாமல் இருப்பாய்,, இருப்பதெல்லாம் பரம்பொருள் இறை! என்பதை உணர்வாய். நீ இறைவனுக்குள் உறைந்து, இல்லாமல் போய்விடுவாய்! இருப்பதெல்லாம் ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தம், பேரானந்தம்! இதையே நானும் உய்த்துணர துடிக்கின்றேன். அன்புடன் பேசாலைதாஸ்
தொடரும் என் சிந்தனை தொடர்கள்,,,,,,,,,

No comments:

Post a Comment