Wednesday, 17 January 2018

மனம் என்னும் குரங்கு!

மனம் என்னும் குரங்கு 
                                                                   சென்ற பதிவிலே என் சிந்தனை சிதறலில், பக்குவமான மனநிலையா னது இயல்பான வாழ்க்கைக்கு அவசியமா னது என்று பதிவு செய்திரு ந்தேன், தொடரும் என்  சிந்தனை சிதறலில், மனம் என்றால் என்ன என்று, நீங்களும் நானும் சேர்ந்தே சிந்திப்போம் என்று சிந்திக்கதோன்றுகி ன்றது. மனம் என்பது எண்ணங்களின் முர ண்பட்ட ஓர் குவியல் என்பது எனது எண்ணம். எண்ணங்கள் அதுவும் கடந்து போன காலங்களில் இருந்து, மனதில் பதிவாகிய பதிவுகளே எண்ணங்களாய் தோன்றுகி ன்றது. கடந்தகாலங்களின் செயல் தொகு ப்பே மனம்! மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பு என்று மகான் ரமணர் கூறுவார். எங்கே எண்ணங்கள் தோன்றுகின்றனவோ, எங்கே அவை தொடங்குகின்ற னவோ, அங்கே உள்ள ஒன்றையே நாம் மனம் என்கிறோம். மனம் என்பது தனியே ஒன்று இருப்பதில்லை அது எண்ண ங்களையே சார்ந்துதிருக்கி றது. நான் என்ற எண்ணத்தையே முதன்மை யாய்க் கொண்டது. அகத்தில் ஆன்மாவையும் , புறத்தில் உலகத்தையும் அது கொண்டிருக்கிறது. அது தனித்திருப்பத்தில்லை அதற்கெண தனி யாக ஒரு இடம் கிடையாது.
                                                              மனம் அது அங்கே பாயும் இங்கே தாவும் ஒரு குரங்கைப்போல, புதியதை பசுமை என நினைக்கும், பின்னர் பழயதை திரும்பி பார்த்து ஏங்கவைக்கும். முரண்பட்ட இந்த மனதின் போக்கிற்கு அதை விட்டுவிட்டால், நம் வாழ்வு துன்பகேணி போல மாறிவிடும். மனம் ஒரு குரங்கு மனித மனம் ஒரு குரங்கு அதை ஆடவிட்டால், தப்பி ஓடவிட்டால் நம்மை பாவத்தில் தள்ளிவிடும், நம்மை துண்பத்தில், ஏற்றிவிடும், ஏனெனில் மனம்  என்ற குரங்கு,ஆசை என்ற குதிரையில் சவாரி செய்ய ஆசைப்படுகிறது. எனவேதான் ஞானிகள் ஆசைகளை அடக்கி, மனதை ஒருமைப்படுத்தி, சும்மா இருக்கும்படி அடிக்கடி சொல்கின்றார்கள்.மனதை வசப்படுத்திவிட்டால் துன்பமும் இல்லை துயரமும் இல்லை. ஆசையை விடவேண்டும். சொல்லற்று செயல்லற்று சும்மாயிருக்கும் நிலையை அடையவேண்டும். தியானத்தின் மூலமே மனதை வசப்படுத்த முடியும். அதனால் தான் சும்மாயிரு என்கிறது பல மகான்களின் நூல்கள். சும்மா இருப்பது என்பதே தவம் அதை வள்ளல் பெருமான் கெஞ்சுவதை பாருங்கள்
இன்று வருமோ? நாளை வருமோ?
அல்லது மற்று என்றுதான் வருமோ?
துன்று மல வெம்மாயை அற்று
வெளிக்கு உள் வெளி கடந்து
சும்மா இருக்கும் சுகம்.
அதையே பத்தரகிரியார் சும்மா இருப்பதை நினைத்து இப்படி ஏங்குகிறார்.
ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனை சுட்டறுத்து
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்
                                                                                          ஐபுலன்களை அடக்கி மனதை கட்டுப்படுத்தல் அவசியமாகின்றது. அப்படி செய்யாவிட்டால் மனித வாழ்வே அவலத்தில்தான் முடியும்.“வாழ்க்கை வெறுத்து விட்டது. வாழ்வ தில் எந்தப் பயனும் தெரியவில்லை. எதுவும் மாறும் என்ற நம்பிக்கை இல்லை. எந்தப் பிடிமானமும் தெரியவில்லை. சாவதைப் பற்றி யோசி க்கிறேன்.” இப்படி எண்ணுவோர் எண்ணிக்கை பெருகிவருவது கவலை அளிக்கிறது. வாழ்வில் நம்பிக்கை இழந்து, பிடிமானம் தெரியாமல், ஒரு விளிம்பு நிலையில் மக்கள் யோசிப்பது பெருகிவரும் நுகர்வுக் கலாச்சா ரத்தின் பின்விளைவு என்றும் சொல்லலாம். பொருட்களின் மதிப்பு உய ர்ந்தும் மனிதர்களின் மதிப்பு குறைந்தும் ஒரு அசுர வேகத்தில் பொருட் குவிப்பில் மக்கள் ஓடுவதில் முதலில் நசுங்கிப்போவது மனித உறவு களே. இல்லாமையில் வாழும் மக்கள் கூட்டங்கள் மரணத்தை யோசிப்ப தில்லை. சாலையில் தூங்கும் மனிதர்கள் கூட நாளையைப் பற்றிய நம்பி க்கையில்தான் ஆழ்ந்து உறங்குகிறார்கள். பொருள் வசதியும் தனிமை யும் கொண்டோர்தான் அதிகம் மரணம் பற்றி யோசிக்கிறார்கள். அதற்கு காரனம் பொருள் ஆசை பண ஆசை, ஆசைகளை அறுத்தெறி, பற்றுக பற்றற்று!
                                      மனதின் எண்ணப்படி வாழ்ந்தால் இறுதியில் வாழ்வின் மீது வெறுப்பும் சலிப்பும் தான் மிஞ்சும்! “நான் வாழ்ந்து யாருக்கு என்ன லாபம்?” என்று கேட்போர் உண்டு. வேலை, குடும்பப் பொறுப்புகள் முடிந்துவிட்டால் அடுத்து என்ன செய்ய என்று தெரியாத பல பெரியவர்களைப் பார்க்கிறோம். எந்த வயதிலும் வாழ்க்கை அசதியாகவும் அர்த்தமில்லாததாகவும் தோன்றலாம்.

ஆனால் மனித வாழ்க்கை எவ்வளவு மகத்தானது? பல லட்சம் ஆண்டுகள் பரிணாம வளர்ச்சியில் நமக்குக் கிடைத்த அற்புத வாய்ப்பு. நம் உடலும் மனமும் கொண்டுள்ள சக்தி தான் மனித இனத்தை இந்த உலகத்தின் தலைமையாக ஆக்கி உள்ளது.

நம்மால் என்ன செய்ய முடியாது? மனம் நினைக்கின்ற அனைத்தையும் செய்து முடிக்க வல்லவர்கள் நாம்.

‘‘என்னவெல்லாம் இல்லை என்னிடம்’’ என்று பட்டியல் இடுவதற்குப் பதில் ‘‘என்னவெல்லாம் என்னிடம் இருக்கிறது’’ என்று பட்டியல் போட்டால் அது வாழ்க்கையின் கண்ணோட்டத்தையே மாற்றிவிடும்.

உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்க ஒரு வழி ஒன்றை நான் இங்கு சொல்ல ஆசைப்படுகின்றேன். கொடுக்கும் மன எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள் . உங்களால் பிறருக்கு என்னவெல்லாம் செய்ய முடியும் என்று யோசியுங்கள். கொடுப்பது தான் மன நலத்தைக் காக்கும் பெருமருந்து. நிலாமதி என்னும் வலைப்பூங்காவில் நான் எழுதிய கதை இங்கு ஞாபகத்துக்கு வருகின்றது. 
செல்வம் மிகுந்த ஒரு பெண், மனநல மருத்துவரைத் தேடிச் சென்றார். தன் வாழ்வு மகிழ்வற்றதாக மாறி விட்டதென மருத்துவரிடம் கூறிய அப்பெண், மகிழ் வைக் கண்டடையும் வழிகளை அறிய விரும்பினார். தன் அலுவலகத் தைக் கூட்டி, சுத்தம் செய்துவந்த பெண்ணை, மனநல மருத்துவர் அழைத் தார். அப்பெண் வந்ததும், மருத்துவர், செல்வம் மிகுந்த பெண்ணிடம், "இவர் பெயர் மரியா. இவர் தன் வாழ்வில் மகிழ்வை எவ்விதம் கண்டடைந்தார் என்பதைச் சொல்வார். தயவு செய்து கேளுங்கள்" என்று கூறினார்.

மரியா, அருகிலிருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்து, பேசத் துவங்கினார்: "என்னுடைய கணவர் மலேரியா நோயினால் இறந்தார். மூன்று மாதங்கள் சென்று, என் ஒரே மகன் ஒரு கார் விபத்தில் இறந்தார். எனக்கென யாருமி ல்லை, எதுவுமில்லை என்று உணர்ந்தேன். உண்ணவோ, உறங்கவோ முடிய வில்லை. தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் அவ்வப்போது எழுந்தது. ஒருநாள் நான் வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பியபோது, ஒரு குட்டிப் பூனை தெருவில் என்னைப் பின்தொடர்ந்து வந்தது. வெளியே அதிகக் குளிராய் இருந்ததால், அந்தப் பூனையை வீட்டிற்குள் வர அனுமதித்தேன். பாலை ஒரு தட்டில் ஊற்றி, அதற்கு முன் வைத்தேன். அதை முற்றிலும் குடித்து முடித்த பூனைக் குட்டி, என் கால்களில் தன் உடலைத் தேய்த்தது. அதைக் கண்டு, நான் சிரித்தேன். அப்போதுதான் உணர்ந்தேன், நான் சிரித்து பல நாட்கள் ஆகிவிட் டன என்பதை... அவ்வேளையில், எனக்குள் ஓர் எண்ணம் உதித்தது. இந்தக் குட்டிப்பூனைக்கு நான் செய்த உதவி, இதுவரை என்னிடமிருந்து காணாமற் போயிருந்த புன்னகையை மீண்டும் கொணர்ந்ததே, இதேபோல், மற்றவர்க ளுக்கு உதவிகள் செய்தால், நான் தொலைத்துவிட்ட மகிழ்வை மீண்டும் கண்டடைய முடியுமே என்று சிந்தித்தேன்.

                                                                           அடுத்தநாள் காலை, கொஞ்சம் பலகாரம் செய்து, என் வீட்டுக்கு அருகில் பல நாட்களாய் படுத்த படுக்கையாய் இருந்த ஒருவருக்கு அதை எடுத்துச் சென்றேன். கண்களில் கண்ணீர் வழிய, அவர் தந்த புன்னகை, என்னை மீண்டும் மகிழ்வில் நிறைத்தது. ஒவ்வொரு நாளும் யாரா வது ஒருவருக்கு ஏதாவது ஒரு வகையில் உதவிகள் செய்யத் துவங்கினேன். அவர்களிடம் நான் கண்ட மகிழ்ச்சி, என்னையும் பற்றிக்கொண்டது. இன்று, என்னைவிட, மகிழ்வோடு உறங்கச் செல்லும் ஒருவர் இருப்பாரா என்று எனக்குத் தெரியவில்லை" என்று மரியா பேசி முடித்தார்.

மரியாவின் கதையைக் கேட்ட செல்வம் மிகுந்த பெண், கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி, மரியாவின் கைகளைப் பற்றி, நன்றி சொன்னார். மருத்துவருக்கும் நன்றி சொல்லிவிட்டு, புன்னகையோடு அவ்விடம் விட்டுச் சென்றார். நீ எவ்வளவு மகிழ்வாய் இருக்கிறாய் என்பது வாழ்வின் அழகை நிர்ணயிக்கப் போவதில்லை; உன்னால் மற்றவர்கள் எவ்வளவு மகிழ்வாய் உள்ளனர் என்பதே வாழ்வின் அழகைக் காட்டும் அளவுகோல். 

என்ன‌ கொடுக்கலாம்? என்னிடம் ஒன்றுமே இல்லையே என நீங்கள் நினைக்கின்றீர்களா? ஒவ்வொருவரிடமும் கொடுக்க நிறைய உள்ளது. பெரிதாகப் பணம் இருக்க வேண்டும் என்று அவசியமே இல்லை.

பார்வையற்றவருக்குப் படித்துக் காட்டுங்கள். உங்கள் பணியாளர் குழந்தைகளுக்குப் பாடம் எடுங்கள். உறுப்பு தானம் செய்யலாம். நீங்கள் பயன்படுத்தாத பல பொருட்களை நல்ல நிலையில் இல்லாதவருக்குக் கொடுக்கலாம். ஆலயத்தைச் சுத்தப்படுத்தலாம். முதியோர் இல்லத்தில் சென்று அவர்களுடன் அன்பு பாராட்ட. தேர்வுப் பணம் கட்ட முடியாதவருக்குப் பணம் கட்டலாம். மனம் சோர்ந்தவர்களிடம் உற்சாக வார்த்தைகள் பேசலாம். ஆலோசனை சொல்லலாம்.

வசதி உள்ளவர்கள் சேவை மனப்பான்மை கொண்டவர்களுக்கு நிறைய செய்யலாம். கொடுப்பது என்பது தான் முக்கியம். யாருக்கு எதைக் கொடுப்பது என்பது அவரவர் தேர்வுகள்.

கொடுப்பது துக்க நிலையை மாற்றும். துக்கம் சுய நலமான உணர்வு. எனக்கு இது இல்லையே என்ற சுய பரிதாபம் தரும் சோகம் தான் துக்கத்தில் பிரதான பகுதி. தன் மேலுள்ள சிந்தனையை மாற்றப் பிறருக்கு உதவ ஆரம்பியுங்கள். துக்கம் விலகும். புதிய நம்பிக்கைகள் பிறக்கும். பல பிடிமானங்கள் வாழ்க்கையில் உள்ளது தெரியும்.

சொந்த வாழ்வில் சோகங்கள் இல்லாதவர்கள் யார்? ஆனால் பிறரின் சோகத்தைத் துடைக்கத் துணிகையில் சொந்த சோகம் இடம் தெரியாமல் போகும்.

எல்லா உலகத் தலைவர்களும் இதை உணர்ந்தவர்கள் தான். டால்ஸ்டாய் மோசமான தாம்பத்திய வாழ்க்கையை அனுபவித்தவர். ஆனால் இலக்கியம் அவரை இளைப்பாற்றியது. தேசத்துக்கே பிதாவான காந்திஜியின் புதல்வர் ஹரிலால். அவருக்கும் காந்திக்கும் ஒரே மோதலும் முரண்பாடும்தான். ஆனால் தேசப்பணி காந்திஜியைச் சோகத்தில் ஆழ்ந்து விடாமல் பார்த்துக் கொண்டது. மனதில் எழும் சலிப்பு தன்மையை, அவலத்தை துடைக்க மனதின் போக்கை மாற்றி அமைக்க நமது மனதில் தோன்றும் எண்ணங்களை அர்த்தமுள்ளவைகளாக மாற்றி வெற்றி காணவேண்டுமென்றல் மனம் என்ற குரங்கை அடக்கவேண்டும்   தொடரும் சிந்தனை சிதறல்கள்  பேசாலைதாஸ்


                            

No comments:

Post a Comment