Friday, 12 January 2018

எனக்குள் நான்!

எனக்குள் நான்!  பேசாலைதாஸ்
எனக்குள்,  என்னை அறியாமல், எழுந்த எத்த னையோ கேள்விகள்? அத்தனைக்கும் என்னால் விடை காணமுடியவில்லை. விடை காணும் அள வுக்கு அறிவோ ஞானமோ என்னிடம் இல்லை. அப்படி இருக்குமோ இல்லை இப்படி இருக்குமோ என்று நான் ஊகித்து, அனுமானித்துக்கொ ண்ட விடயங்கள் சரியோ பிழையோ நான் அறியேன். எண்ணங்களை அலையவிட்டிருக்கின்றேன். அது தன்பாட்டில் மரங்களோடு, மலைக ளோடு காற்றின் அதிர்வுகளோடு, கடல் அலைகளின் தாலாட்டில், தென்ற லின் வருடலில் முட்டி மோதி, திரும்பவும் என்னிடம் வருகின்றன. அவை எல்லாம் எதையோ எனக்கு சொல்கின்றன, அதனை கிரகித்துக்கொ ள்ளும் பக்குவமோ ஞான ப்பார்வையோ என்னிடம் இல்லை. உள்மன உணர்வுகள் என்னவோ எனக்குள் ஒரு மன‌ உழைச்சலை ஏற்படுத்துகின்றது. 
                               வயது அறுபதுகளுக்குள் அனுமதி இன்றி நுழைகின்றது. வாழ்வில் இன்னும் இருப்பது ஒன்றிரண்டு பத்துக்கள்! சிலவேளை அத ற்கும் அவகாசம் இல்லாமல் வாழ்வு முடிந்துவிடக்கூடும்! எதனையும் சாதித்ததில்லை, யாருக்கும் பயண்பட வாழ்ந்ததில்லை. சராசரி மனித ர்கள் போல, அன்றாட வாழ்க்கைப்போராட்டத்தில் காலங்கள் கரைந்தோ டிவிட்டன. திரும்பிப்பார்த்தால் வாழ்வில் சந்தித்த மன‌மகிழ்ச்சியான நாட்கள் எதுவும் இல்லாதது போல இருக்கின்றது, மாயையின் பிம்பங்க ளைப்போல,,,,
                                 ஏக்கங்கள்,ஏமாற்றங்கள், வஞ்சகங்கள், நிராகரிப்புகள், தோல்விகள், சலிப்புகள் இப்படி சங்கிலி கோர்வை போல வாழ்வில் ஒரு தொடர்கதையாக,,,, நல்ல மனிதர்களை,, நல்ல இதயங்களை,, கருணை உள்ளங்களை, பாசப்பிணைப்புகளை வாழ்க்கையில் தொலைத்துவி ட்டோமோ என்ற இனம் புரியா ஐயம் மேலிடுகின்றது. வாழ்வை திரும்ப தொடங்கவும் முடியாது, வாலிபமும், வசந்தமும் இனி வருவதில்லை, கடந்தவை கடந்தவைதான்!
                                                             இனி இருக்கும் காலங்களை எப்படி வாழ்ந்து கழிப்பது? அதுவே எனக்குள் எழும் கேள்விப்பிரவாகம்! ஏழைகளுக்கு
உதவி செய்து வாழ்ந்து கழிக்கலாம், செல்வம் அதற்கு வேண்டுமே! அன்போடு வாழ்ந்து பார்க்காலம் என்றால் அன்பை பகலில் விளக்கு வைத்து தேடவேண்டிய நிலை! வேறு என்னதான் செய்து வாழ்ந்து மன த்திருப்தி அடையாலாம், எல்லாவறையும் விட்டொழித்து இயல்பாக இருப்பதுவே மெய்ப்பொருள் தேட்லுக்கு வழியாக எனக்கு தெரிகின்றது!
இயல்பாக இருப்பது எப்படி? அதுவே ஒரு தேடல்தான்,,,,,,தொடரும்   பேசாலைதாஸ்

No comments:

Post a Comment