Friday, 12 January 2018

இயல்பாக வாழ்வை கழிப்பது எப்படி?

இயல்பாக வாழ்வை கழிப்பது எப்படி?  பேசாலைதாஸ்
வாழ்வில் எந்த மன உளைச்சல் இன்றியும், திருப்தியாக வாழவேண்டுமா? எனக்கு தெரிந்த ஒரே ஒரு வழிதான் இருக்கின்றது. அதுதான் இயல்பாக இருப்பது!  பேருந்தில் அல்லது ரெயில் பயணத்தில், பயணம் செய்யும்போது, பக்கவாட்டில் பார்த்தால், மரங்கள் கட்டிடங்கள் பின்னோக்கி ஓடுவதை உணர்கின்றோம். உண்மையில் அவை நகரவில்லை,  இயல்பாக அதே இடத்தில் நிற்கின்றன.   நாம் தான் நகர்ந்துகொண்டிருக்கின்றோம். அதுபோலத்தான் வாழ்க்கை எண்ணும் பயணத்தில், நாம்  இயல்பாக இருப்பதில்லை. எனவேதான் நமக்கு எல்லாமே வினோதமாக தெரிகின்றன. வினோதமாக எண்ணுகின்றோம். அதற்கு காரனம் நாம் இயல்பாக இல்லாமல், எண்ணற்ற முரண்பாடுகள், நம்மை சூழ அதற்குள் வாழ்க்கைக்கான போராட்டத்தில் சிக்குப்பட்டு கிடக்கின்றோம். எது எப்படி இருக்கின்றதோ! அதை அப்படியே  நமது மனம் ஏற்றுக்கொள்ளவேண்டும், அதுதான் இயல்பு நிலை, வேறுவிதமாக சொல்லப்போனால், அதுவே யதார்த்தம் உண்மை நிலை!  பிரச்சனை என்னவென்றால் இயல்பு நிலையை, யதார்த்த நிலையை. உண்மையை, மெய்ப்பொருளை, நமது மனம் ஏற்றுக்கொள்ள தயங்குகின்றது. அதற்கு காரணம், நமது மனதின் மையைப்பொருளில் நான் என்ற சுயம் ஒட்டிக்கிடக்கின்றது. இந்த நான் என்பது நமது மனதில் இருக்கும் வரை, அந்த நான் என்பது ஒவ்வொன்றையும் தனக்கு விரும்பியபடியே கற்பனை செய்யும்.  ஆனல் நியமான உண்மை, மெய்ப்பொருள் அந்த கற்பனைக்கு முரணாக அமைகின்றது. என்வே தான் சிக்கல் ஆரம்பிக்கின்றன. 
                                           இதற்கு நான், அன்றாட வாழ்வில் இருந்து பல உதாரணங்களை காட்ட முடியும். நமக்கு பிடித்தமான நபர்கள் இருப்பார்கள், அம்மா,அப்பா, சகோதரங்கள், உற்ற நண்பர்கள், மனைவி, பிள்ளைகள், காதலன், காதலி இப்படிப்பட்டவர்களுடன் நாம் நெருங்கி பழகுகின்றோம். அவர்களுடன் தான் நமது வாழ்க்கை நகர்கின்றது. அவர்கள் பலவீனமானவர்கள், குறைபாடு உள்ளவர்கள். அதேவேளை அவர்களிடம் பலமான பக்கங்களும் உண்டு, அதுதான் இயல்பு, ஆனால் நாம் என்ன நினைக்கின்றோம். அவர்களின் பலத்தை,அவர்களின் நன்மையான பண்புகளை மட்டும் ஏற்றுக்கொண்டு, அவர்களிடம் இருந்து நன்மைகளை மட்டுமே மனம் கற்பனை பண்ணுகின்றது. அவர்களின் பல்வீனமான பண்புகளினால் வரும் எதிர்மறையான விளைவுகளை நாம் ஏற்றுகொள்ள தயங்குகின்றோம். மறுவலத்தில் சொன்னால், பலவீனத்தோடு ஏற்றுக்கொள்ள, உறவை ஒத்துக்கொள்ள மனம் இடம் கொடுப்பதில்லை. இது இயல்பு நிலைக்கு மாறானது ஆகும்.
                                          இயல்பான வாழ்கை என்பது இருப்பதை அதாவது இயல்பாக இருப்பதை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ்வது, மனம் கற்பனை பண்ணும் ஆசைகளை, கனவுகளை வாழ்க்கை மீது ஏற்றிவிட்டு. அந்த கனவுகளும் கற்பனைகளும் நடக்காது போனால் மனம் வேதனைப்படும். அதற்காக கனவு காணவேண்டாம் , எதற்கும் ஆசைப்படாதே என்று நான் வாதாடவரவில்லை. ஆசைகள், கற்பனைகள் வாழ்வில் ஒட்டிக்கொள்ளாமல், தாமரையிலை தண்ணிபோல ஒட்டியும் ஒட்டாமலும் நமது ஆசைகளை வைத்துக்கொள்ளவேண்டும். ஆசைகள் நிறைவேறினால் நல்லதுதான், ஆனந்தம் தான் அதேவேளை அத்தனை ஆசைகளும் நிறைவேறுமா என்ன? வாழ்க்கை என்னும் ஆற்று பயணத்தில் புத்தர் சொல்லவது போல,  ஆற்றில் இழுபட்டு செல்லும் ம்ரக்கட்டை போல, வாழ்கையையை நக‌ர்த்தினால் வாழ்க்கை நரக‌மாக தெரியாது. இயல்புக்கு மாறாக ஆசைப்பட்டு கற்பனை பண்ணி வாழ்ந்தால் வாழ்வே மாயமாகவே இருக்கும். பிறப்பதற்கும் இறப்பதற்கும் நடுவிலே மனம் பெரிய பெரிய கனவுகாணும் அத்தனையும் ஈடேறுமா? என்வே இயல்பாக வாழ்வை நகர்த்துவோம்!
தொடரும்,,,


No comments:

Post a Comment