சென்ற பதிவில், என் சிந்தனை ச்சிதறல்களாக மனம் பற்றி, என் சிந்தனையை தெளித்திருந்தேன். அதிலே மனம் ஒரு குரங்கு என்று சித்தரித்திருந்தேன். மனமானது அங்கும் இங்குமாக, பாய்ந்து அலைந்து திரிவதினால், நமக்கு இன்பம் துன்பங்களை மனம் அடிக்கடி நமக்கு தருகின்றது. இன்பத்துக்கும் துன்பத்துக்கும் காரனம் மனமே, அதை உண்டாக்கு வதும், அதனை தக்க வைத்துக்கொ ள்வதும் இந்த மனமே! இன்ப துன பங்களுக்கு காரனம், புறச்சூழல் அல்ல, உள்மனதின் பிரதிபலிப்புகளே அவை. இன்பம்,துன்பமோ, கடவுளாலோ, சாத்தானாலோ வருவது கிடையாது, அவை எல்லாமே எமது எண்ணங்களினால், மனதில் ஊற்றப்படுகின்றது. எந்தப்பொருள், அல்லது காட்சி ஊடாக, எண்ணங்கள் உருவாகி மனதுக்கு வருகின்றதோ, அதை ஒட்டி இன்பமும் துன்பமும் அமைகின்றது. உதாரணம் கவர்ச்சியான ஒரு பெண்ணின் கண்கள், மார்புகள் மீது எமது எண்ணம் படிகின்றபோது, நமக்கு காம இன்பம் மனதில் பதிகின்றது. அதேபோல, ஒரு அவலச்சாவை எமது கண்கள் கண்டு, அதன் மீதான எண்ணங்கள் சோகத்தை மனதில் பதிக்கின்றது.
நமது மனதில் வேரூன்றும் எண்ணங்கள், எமது பழக்கவழக்கத்தை மாற்றியமைக்கின்றது. இந்த பழக்கம், நடவடிக்கை மூலமாக இன்பதுன்பங்களை அறுவடை செய்கின்றோம். நமது வாழ்வின் கெட்ட சூழ்னிலைகளை மாற்றமுற்பட்டால், அதற்கான பழக்க வழக்கங்களை மாற்றவேண்டும், அப்படி மாற்றும் போது, நமது எண்ணங்களையும் மாற்றவேண்டும். ஏனெனில் நாம் என்ன எண்ணுகின்றோமோ! அதுவாகவே நாமும் மாறிவிடுகின்றோம். பணப்பேராசை எண்ணம் கொண்ட ஒருவனை பாருங்கள்! அவன் எப்படியாவது பணம் தேட வேண்டும் என்றே எண்ணுகின்றான். எவன் எக்கேடு கெட்டால் என்ன? எனக்கு பணம் வேண்டும் என்பதிலேயே குறியாகிவிடுகின்றான்.
மக்கள் தங்கள் எண்ணங்களின் நிலைக்கு ஏற்ப கீழ் நிலையிலோ மேல் நிலையிலோ வாழ்கிறா ர்கள். இருள் நிறைந்து குறுகிய தாய் அல்லது ஒளி மிகுந்து பரந்து விரிந்ததாய்க் அந்த நிலை காண ப்படுகிறது. காணும் அனைத்திலும் மனிதன் தன் எண்ணத்தின் சாய லையே காண்பான். சந்தேகமும் , பேராசையும் , பொறாமையும் நிறைந்த ஒரு மனிதனை எடுத்துக் கொள்ளுங்கள். அவனிடம் தென்படும் உலகம் எந்தச் சிறப்பும் இன்றி சூதுவாது நிறைந்து காணப்படும். தன்னிடம் எந்தச் சிறப்பும் நற்குணமும் இல்லாததால் உலகிலும் மற்றவரிடத்திலும் எந்த சிறப்பையும் நற்குணத்தையும் அவனால் காண இயலாது. தன்னுடைய கடவுளைக் கூட அவனிடம் இலஞ்சம் பெற்று அவனுக்குக் காரியங்களை சாதித்துக் கொடுப்பவராக எண்ணுகிறான்.எந்த உள்ளத் தூய்மையையும் கடவுளை நாடுவதற்குத் தேவையானதாக அவன் எண்ணவில்லை. தன்னைப் போலவே மற்றவர்களும் கேடுகெட்டவர்களாக அவன் பார்வை முடிவுகட்டுகிறது.மிகத் தூய தன்னலமற்ற வார்த்தைகளிலும் செயல்களிலும் களங்கத்தைக் கற்பிக்கிறான்.
சந்தேகக் குணமில்லாத பரந்த மனமும் தாராள குணமும் உடைய மனிதனை இப்பொழுது கருதுங்கள். அவனது உலகம் எவ்வளவு ஆனந்தமாக மகிழ்ச்சியாகக் காட்சி அளிக்கிறது . அனைத்து உயிர்களிலும் மனிதர்களிலும் ஒரு தெய்வீகத்தைக் காண்கிறான். அனைவரையும் உண்மையாக ஏற்கிறான். அவர்களும் அவனிடத்து உண்மையாகவே நடந்து கொள்கிறார்கள். மிகக் கொடியவர்களும் அவன் முன்னிலையில் தங்கள் இயல்பை மறந்து ஒரு கணம் அவனைப் போலவே மாறி விடுகிறார்கள். திடீர் என்று தங்களுக்குள் நிகழ்ந்த இந்த மாற்றத்தை எண்ணி வியந்து தாங்களும் மகிழ்ச்சியான வாழ்வு வாழ வாய்ப்பு இருப்பதை எண்ணி மகிழ்கிறார்கள்
ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய எண்ணங்களுக்கு ஏற்ப உயர்வானவனாகவோ தாழ்ந்தவனாகவோ சான்றோனாகவோ தரங்கெட்டவனாகவோ இருக்கிறான். அவனது நிலைக்கு அவனது எண்ணங்களே இம்மியளவும் குறையாமல் காரணங்களாக உள்ளன. தன்னுடைய எண்ணங்களால் கட்டப்பட்டுள்ள எல்லைச் சுவருக்கு உள்ளே மட்டும் தான் அவனால் உலாவ முடியும். அதுதான் அவனது உலகம். அந்த உலகத்திற்குரிய பழக்கங்களை பழகிக் கொள்கிறான்.அவன் கொண்ட எண்ணங்கள் செயல்வடிவம் பெற அவனது உலகம் அவனுக்கு எல்லா வழிகளிலும் ஒத்திசைவு செய்கின்றது. ஒருவனை எவரும் கட்டாயப்படுத்தி தாழ் நிலையில் கொண்டு சேர்க்க முடியாது. தன் எண்ணங்களைப் பண்படுத்தி சிறகை விரித்து சிகரங்களை அடையலாம்.தீயவற்றைப் பற்றாமல் உறுதியுடன் அவற்றின் பிடியை உதறி, நன்மையைக் கடைப்பிடித்து, குறுகிய எண்ணங்களை விட்டொழித்து தன் எண்ண உலகை பரந்து விரிந்ததாக மாற்றி குளுமையான இதமான காற்றின் இடையே வானில் பறக்கலாம்..உங்கள் எண்ணங்களை குறுகிய எண்ணங்கள், எதிர்மறை சிந்தனைக்குள் பூட்டிவைத்து, உங்களையே நீங்கள் தாழ்மைபடுத்தி, அவஸ்தைப்படவேண்டாம், உங்கள் எண்ணங்கள் சிறகடித்து விண்ணில் பறக்கட்டும், பரிவு, அன்பு, இரக்கம், கருனை, நட்பு இப்படியான விரிந்த விசாலாமான வானில் பறக்கவிடுங்கள்,,, தொடரும் சிந்தனை சிதறலில் உங்கள் அன்பன் பேசாலைதாஸ்



No comments:
Post a Comment