Tuesday, 16 January 2018

பக்குவமான மன நிலை!

பக்குவமான மன நிலை!
சென்ற பதிவிலே, என் சிந்தனை சிதறலாக, இயல்பான மன நிலை பற்றி, விபரித்திருதேன், இயல்பான நிலை வாழ்வில் தோன்றுவதற்கு பக்குவ மான மன நிலை வேண்டும். பக்குவமான நிலையா? அது எது என்று தெரியவில்லையா? பக்குவமான நிலை என்பது ஏற்றுக்கொள்ள தயா ராக இருக்கும் நிலை என்று பொருள் கொள்ளலாமா? ஆம் அது சரி என்று எனக்கு தெரிகின்றது. சிறுமி ஒருத்தி வயதுக்கு வந்துவிட்டாள், பக்குவ ப்பட்டுவிட்டாள் என்று நாம் சொல்லிக்கொள்வதில்லையா! அதாவது ஒரு குழந்தையை அடைவதற்கான தயார் நிலையில், உடல் வந்துவிட்டது என்றுதானே அர்த்தம்! அதுபோலத்தான் இயல்பான வாழ்கை வாழ, அத ற்கு  ஏற்ற மனப்பக்குவம் தேவை. மனப்பக்குவம் அடைவதற்கு மாபெரும் ஞானியாக, அறிவியல் மேதைகளாக இருக்கவேண்டிய அவசியமில்லை. பைபிள்  சொல்கி ன்றது, ஞானிகளும் விவேகிகளும், வெட்கித்துப்போக,  பாமரருக்கும், ஏழைகளுக்கும் ஞானத்தை இறைவன் கொடுத்தார் என்று. இயேசு ஒரு ஏழையாக அவதரித்தார். முகம்மது நபி, படிப்பறிவில்லதவர். கண்ணன் ஆடுமேய்த்தவர் இப்படியாக அவதாரமாக வந்தரெல்லாம் சராசரி மனிதனாக பிறந்துள்ளார்கள்.
                                                                 ஞானம் பெற்ற பலரும் ஆலயங்களிலோ, வழிபாட்டு தலங்களிலோ அன்றாடம் தொழும் பக்திமான்களாக இரு ந்ததே இல்லை. ஆடு மேய்ப்பவன், துணி துவைப்பவன்,விறகு உடைப்ப வன், வேடன் என்று சாதாரண மட்டங்களில் இருந்தவர்களே நாளடைவில் பரம ஞானிக ளாக  பரிணமித்துள்ளனர். எதறக்காக இப்படி நடக்கி ன்றது? உண்மை இது தான். இயற்கையானது புறச்சூழ் நிலையை பார்ப்பதில்லை. அது உள்மன வெளியை பார்க்கின்றது. மனமானது வெறூமையாக இருக்கவேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு நமது மனமானது வெறுமையாகின்றதோ அவ்வள வுக்கவ‌வளவு ஞானம் நிரம்ப சந்தர்ப்பம் உண்டு.
                                                                               நிறைவானது வரவேண்டுமெனில் குறைவானது நம்மை விட்டு அகழவேண்டும். ஆலயம் செல்வோர்கள், அல்லது குருக்கள் உள்ள குடும்பங்களில், பெருமிதம் நிரம்பி இருப்பதை நாம் அவதானிக்கமுடியும். இதுவும் ஒருவித அகம்பாவம் தானே! தினம் தோறும், ஆலயம் செல்பவர்கள், அல்லது சபைக்கூட்டங்களுக்கு செல்பவ ர்களை நீங்கள் அவதானித்தால் அவர்கள் இறைபக்தி உள்ளவர்கள் என்பது உண்மையே ஆனாலும் தாங்கள் இறைவனுக்கு நெருக்கமானவ ர்கள், தூயவர்கள் என்ற எண்ணப்பெருமிதம் இவர்களிடம் இருக்கின்றது. சமூகத்தில் தரமற்ற வேலை செய்து, பிழைப்பவர்கள் தாழ்மை உள்ளவ ர்களாக உள்ளத்தில் செருக்கற்றவர்களாக இருப்பதினால் ஞானப்பழ த்தின் சுவையை அனுபவிக்கும் சந்தர்ப்பம் இவர்களுக்கு கிடைக்கி ன்றது.
                                                   சூஃபி தத்துவத்தில் இதற்கொரு கதை உண்டு. திருடன் ஒருவன், ஞானியின் குகைக்குள் எதாவது கிடைக்குமா என்று திருடச்சென்றான். கும் இருட்டில் குகைக்குள், எதையோ தேடும்போது, குகைக்குள் இருந்த ஞானி, யாரது என்ன தேடுகின்றாய் . எனக்கு சொன்னால் நானும் சேர்ந்து தேடுவேன் என்றார். திருடனோ வெலவெ ளுத்து போனான். நான் திருடன் என்று சொல்ல, ஞானியோ திருடுவதற்கு இங்கு என்ன இருக்கின்றது வேண்டுமானால் என்போர்வை இருக்கி ன்றது எடுத்து செல் என்று, போர்வையை அவனிடம் எறிந்தார் அந்த ஞானி, திருடனோ ஆளைவிட்டால் போதுமென்று அதை எடுத்துக்கொ ண்டு, ஓடிவிட்டான். பின்னர் பிறிதொரு சந்தர்ப்பத்தில் அந்த திருடன், மாளிகை ஒன்றில் திருடும்போது வசமாக மாட்டிக்கொண்டான். நீதி மன்றில் திருடன் நிறுத்தப்பட்டபோது, நீதிபதி உனக்கு தெரிந்த யாரா வது உன்னை சரிரப்பிணையில் எடுக்க இருக்கின்றார்களா எனக்கே ட்டார். திருடனுக்கு யார் வருவார் உதவி செய்ய, ஆனாலும் சட்டென்று திருடனுக்கு குகையில் இருந்த ஞானியின் நினைவு வரவே, அவன் ஞானியின் பெயரைச்சொல்ல, ஞானியும் நீதிமன்றம் வரவழைக்க ப்பட்டு, திருடனை அழைத்துப்போக, நீதிபதி ஞானிக்கு கட்டளை இட்டார்.
                                                                              திருடனை விடுவித்த ஞானியோ தன் வழியே போனார், திருடனும் அந்த ஞானியை பின் தொடர்ந்தான். உன க்கு என்ன வேண்டும், ஏன் என்னை பின் தொடர்கின்றாய் என ஞானி கேட்க,  இனி என்னால் உங்களை விட்டு பிரியமுடியாது!என்றான் திரு டன், சரி வா போகலாம் ஆனால் எனக்கு கிடைப்பதை உனக்கு தருகி ன்றேன். ஆனால் அது நீ திருடும் பொருளாக இருக்காது, கண்ணுக்கு புலப்படாத பொருளாக இருக்கும் என்றார். திருடன் சொன்னான் நீங்கள் சொல்லும் அந்த கண்ணுக்கு புலப்படாத ஏதோ ஒன்றை என்னால் உண ரமுடியும், ஏனெனில் என் உள்மனதில் நீங்கள் கோபுரமாக உயர்ந்து நிற்கின்றீர்கள். நீங்கள் தரும் அந்த பொருளை நானும் சுவைக்க ஆசி க்கின்றேன் என்றான் அதுமுதல் திருடன் அவரது சீடானாகி ஞானம் பெற்றான்.
                                                      இதில் இருந்து நீங்கள் என்ன விளங்கிக்கொள்கி ன்றீர்கள்? திருட வந்த திருடனின் மனதில், ஞானியை தன் உள்ளத்தில் உயர்ந்த இடத்தில் வைக்கும் மனப்பக்குவம் அவனுக்கு ஏற்பட்டதை ஞானி உணர்ந்து, அந்த திருடனுக்கு ஞானம் மிகடைக்கும் என்ற எண்ண த்தில் சீடனாக ஏற்றுக்கொள்கின்றார். நகை பணம் என்று திருடி வந்த திருடன், ஞானப்பொருளை, மெய்ப்பொருளை கண்டுணரும் பக்கியம் பெற்றவனாகின்றான். மெய் அனுபவத்தையும்  மனத்திருப்தியும் நாம் அடையவேண்டுமாயின் முதலில் நமது வாழ்வு இயல்பானதாக இருக்க வேண்டும், அந்த இயல்பு நிலைக்கு மனம் பக்குவப்படவேண்டும். மனதை பக்குவப்படுத்தும் வழிகளை நாம் தான் கண்டு உணரவேண்டும்,,,,,, இன்னும்  தொடரும் என் சிந்தனை சிதறல்கள்,,,, அன்புடன் பேசாலைதாஸ்

No comments:

Post a Comment