Tuesday, 6 February 2018

சொர்கமும் நரகமும்! பேசாலைதாஸ்

சொர்கமும் நரகமும்!
                                                            சிதறிச் செல்லும் என் சிந்தனையில், சென்ற தடவை, பரம் பொருள் பற்றி, சற்று சிலாகித்தி  ருந்தேன், பரம் பொருள் என்று, என் சிந்தனை சுழன்றவுடன் சட்டென்று என் நினைவில் ஒட்டி க்கொண்டது, சொர்க்கம்தான்! சொர்க்கம் என்று வந்துவிட்டால், கூடவே நரகமும் இணைந்து கொள்வதை தடுக்கமுடியாது, எனவே சொர்க்கம், நரகம் என்ன என்று உங்களோடு, அளவளாவ விரும்புகின்றேன், என் வாழ்வின் பின் புலம்,  கிறிஸ்தவ கோட்பாடுகளோடு பின்னிப்பிணை ந்தவை, எனவே அடிப்படை எண்ணங்கள், கிறிஸ்தவ மறை சார்ந்தி ருந்தால், அன்பர்கள் என்னை மன்னித்தருள்க!

                                                                                 சொர்க்கம் எங்கே இருக்கின்றது, விண்ணிலா, மண்ணிலா? சொர்க்கம் என்றாலே நம்மை அறியாமல், கண்கள் மேலே, வானத்தை நோக்கும், விண்ணிலே சொர்க்கம் உண்டு, அங்குதான் இறைவன் உறைகின்றான், தேவர்களும், தூதர்களும் உலாவி த்திரின்றனர், புண்ணியம் செய்து மரித்தவர்கள், அதைக் கண்டு மெய்ம றக்கின்றனர் என்று அனேகமாக எல்லா மதங்களும் இதனையே விபரி க்கின்றன. இது உண்மையா என்பதனை நாம் சிந்திக்கவேண்டியுள்ளது.

                                                                                  விண்ணில் இருப்பது சொர்க்கமும் அல்ல, அதுதான் அன்னையின் மலர் பாதம் என்றான் புலமைப்பித்தான். அவன் சொல்லவருவது இதுதான், சொர்க்கம் மண்ணில் தான் இருக்கி ன்றது, நாம் வாழும் வாழ்க்கையில் இருக்கின்றது. அது தாயவள் அன்பில் தேனாகின்றது, அன்னை என்பது வெறும் மானுடம் அல்ல, அதுதான் உலகத்தில் தெய்வம் என்று, தெய்வத்தை முன்னிறுத்துகி ன்றது, வேதங்களாக அன்னையவள் கூறிய உபதேசங்கள் இருக்கின்றன இவை யாவும் ஒருங்கே இருந்துவிட்டால்,,,, அது சொர்க்கம் தானே! நீங்களே சொல்லுங்கள்.

                                                                       ஒருநாள் நல்ல பக்தியுள்ள போர்வீரன் கௌதம புத்தரிடம் சென்று , குருவே என் வாழ்க்கையை சொர்க்கமாக மாற்ற நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான் . புத்தரும் அவனை உட்கார சொல்லி அவனை நோக்கி காரசாரமாக திட்ட ஆரம்பி த்தார் , அந்த போர் வீரனுக்கு கோபம் வந்து விட்டது , உடனே தன் உடை வாலை உருவி புத்தரை நோக்கி கையை ஓங்கினான் , அப்போது புத்தர் சொன்னார் இப்போது நீ நரகத்தை நோக்கி நெருங்கி க்கொண்டு இரு க்கிறாய் என்றார் உடனே அந்த போர் வீரன் சற்று சிந்தித்து பின்பு தன் உடைவாளை தன் உரையில் போட்டன், உடனே புத்தர் அவனை பார்த்து சொன்னார் இப்போது நீ சொர்கத்தை நெருங்கி விட்டாய் என்று சொன்னார் .
                                                  சொர்க்கமும் நரகமும் நாம் அன்றாடம் வாழ்வில் இருக்கின்றது. அது நம் உணர்வுகளில், உணர்ச்சி களில் ததும்புகின்றது, கோபம், பொறாமை, அழுக்காறு, வெறுப்பு, ஆத்திரம் இவைகளினால் வாழ்க்கை சூழப்படும் போது அங்கே வாழ்க்கை நரகமாகின்றது! அன்பு, மனோரமியம், இரசனை, கருனை, இரக்கம், பரிவு, பாசம், புரிந்துணர்வு இவைகளால் ஒரு மனிதனின் இதயம் நிரம்பி இருக்குமானல், அவனைச் சுற்றி சொர்க்கம் இருக்கும், அல்லது அவன் வாழும் சூழலை சொர்க்கமா க்கிவிடுகின்றான், அதுவே ஒரு பெண்ணாக இருந்துவிட்டால்? அந்த தேவதை வாழும், இல்லம் சொர்க்கமாகிவிடும். ஆக மொத்தத்தில், எல்லாமே நம் மனதில் தான் உண்டு.

                                                         கவிஞர் கண்ணதாஸன் இப்படிச்சொன்னார், சொர்க்கமும் நரகமும் நம் வசமே! நான் சொல்லவதை உன் மனம் கேட்கட்டுமே! சத்தியம், தர்மங்கள் உன் மனதில் நிலைக்கட்டுமே என்று நமது மனங்களுக்குச் சொன்னார். அதே கவிஞன் தான், முரண்பட்டு இன்னுமொரு சந்தர்ப்பத்தில், இப்படிச்சொன்னார்,,,சொர்க்கம் மது விலே, சொக்கும் அழகிலே! மது தரும் சுகம், தினம் தினம் எதில் வரும்? எல்லாம் உடல் உறவுதான், சொர்க்கம் மதுவிலும், மங்கையிலும் என்று, தன் இளமைப்பொழுதை கழித்துவிட்ட அந்த கவிஞன், தன் தவறை உணர்ந்து, முத்தம் என்றும், மோகம் என்றும் சத்தமிட்டு  சத்தமிட்டு ,புத்தி கெட்டுப் போனதொரு காலம்! என்றும் பாடியுள்ளான். சுர்க்கமாக சொ ல்லப்போனால், சொர்க்கம் என்பது நாம் வாழும் விதத்தில் உண்டு அது நம் கைகளில் உண்டு.வாழ்கை சொர்க்கமா அல்லது நரகமாக வேண்டுமா முடிவு நம்முடைய கையில் தான் .

                                                       யாருக்குத்தான் சொர்க்கம் செல்ல ஆசை இருக்காது? எனக்கில்லையா உங்களுக்கு இல்லையா? எல்லோரும் ஆசைப்படுகின்றார்கள். ஆனால் அதற்கான வழியை, சாவியை தொலைத்துவிட்டு அலைகின்றார்கள், சிலர் வழி தெளிவாக தெரிந்தும், அதனை எதிர்கொள்ள, பயப்படுகின்றனர், ஆமாம், மரணத்தைத்தான், இங்கே குறிப்பிடுகின்றேன். சொர்க்கம் போவதற்கு முன்னர் நீ கல்லறையின் படிக்கட்டில், மிதித்தே ஆகவேண்டும், இதில் கடவுளுக்கு கூட விதிவிலக்கு இல்லை என்பதை தெளிவாக, வாழ்ந்து, செய்தும் காட்டி இருக்கின்றார் இயேசு. மரணமே உன் கூர் எங்கே? என மரணத்துக்கு சவால்விட்டவர் இயேசு, மரித்தேன் ஆனாலும் இதோ சதாகாலமும் உயிரோடு இருக்கின்றேன் என்று நமக்கு நம்பிக்கையூட்டியவர் இயேசு. ஒரு வித்து மடிந்தால் ஒழிய விருட்சமாகாது என்று சொன்னவரும், அவரே! இதனால் தான் இயேசு காட்டிய வழி, போதனை, எல்லா போதனைகளை விட‌ தெளிவாக இருக்கின்றது.

                                                                  ஆரம்பத்தில் சொன்னதை திரும்பவும் மீட்கின்றேன், இறந்தும், நிரந்தரமாக சொர்க்கம் செல்லலாம், இறவாமலும், உலகத்தில் சொர்க்கத்தை அனுபவிக்கலாம். எல்லோரும் சொர்க்கத்திற்கு போவதையே விரும்புகிறார்கள், ஆனால் சாவதற்குத்தான் தயாராக இல்லை. சொர்கத்திற்கும் நரகத்திற்குமான வேறுபாட்டை அறிஞர் பெர்னாட்ஷா இவ்வாறு கூறினார். ஒருவனுக்கு இந்திய மனைவியும், நோர்வே சம்பளமும், சீன உணவும், பிரிட்டிஷ் வீடும் கிடைத்தால் அதுவே சொர்க்கம். மாறாக, இந்திய சம்பளமும், நோர்வே மனைவியும், சீன வீடும், பிரிட்டிஷ் உணவும் இருந்தால் அது நரகம். பெர்னாட்ஷா தமாசாக சொன்னது அன்றாட வாழ்வின் தரத்தை குறித்து கூறியுள்ளார். நான் சொகில்கின்றேன், சொர்க்கம் என்பது உணர்வு நிலைப்பட்டது.

                                                      சொர்க்கம் உணர்வு அதாவது psycological feeling சம்பந்தப்பட்டது, இடம் geographyical  சம்பந்தப்பட்டது அல்ல‌. இதற்கு சிவ பெருமான், சித்தர்களுக்கு தந்த விளக்கத்தை உங்களுக்கு தருகின்றேன். ஒரு முறை சிவ பெருமான் தலைமையில் சித்த பெருமக்களின் கூட்டம் நடைபெற்றது. அப்போது சில சித்தர்கள் '' எம்பெருமானே . மனிதர்கள் புவியிலேயே சொர்க்க வாழ்க்கையையும் நரக வாழ்க்கையையும் அனுபவித்துவிடுகின்றனர் என்று கூறப்படுகிறதே . அது உண்மையா?" என கேட்டனர். ஆம் என்று கூறினார் எம்பெருமான். அது எப்படி என சித்தர்கள் கேட்டபோது " அவர்களின் கர்ம வினைகளுக்கு ஏற்பவே அவர்கள் புவியில் பிறக்கின்றனர்" என்று கூறினார். எனினும் சித்தர்கள் இந்த பதிலில் திருப்தியடையவில்லை. தங்களுக்கு இன்னும் விளக்கம் வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொ ண்ட எம்பெருமான் சொர்க்கத்தில் நடைபெரும் காட்சிகளை காட்டிய ருளினார்.அங்கு சிலரின் சொா்க்க வாழ்க்கை முடிவுக்கு வந்து மீண்டும் பிறப்பெடுக்கும் காலம் வந்திருந்தது. அவர்கள் அனைவரும் தர்ம தேவன் முன்பு நிறுத்தப்பட்டிருந்தனர். 

                                                                    அங்கு அவர்களின் கடைசி விருப்பங்கள் உள்ளதா என தர்ம தேவன் ஒவ்வரிடமும் கேட்க தொடங்கினார். முதலாமவர் தர்ம தேவனிடம் "தான் எப்போதும் சொர்கத்தில் வாழ விரும்புகிறேன் " என கூறினார்.அதற்கு தர்ம தேவன் "சொர்கத்தில் நீங்கள் வாழும் காலம் முடிந்து விட்டது, எனினும் உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும். பூமியில் உங்களுக்குஅமைதியான இடத்திலும் அன்பு நிறைந்த மனிதர்கள் மத்தியில் செல்வ செழிப்பான குடும்பத்தில் நற்பிறப்பு அமையும். அதனை நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள். சொர்கத்தில் இருந்த வரையில் நீங்கள் அனைவருடனும் எப்படி இருந்தீர்களோ அதே முறையில் பூமியி லும் வாழுங்கள்.சொர்க்கத்தில் நீங்கள் அனுபவித்த அதே வாழ்க்கையை பூமியி லும் அனுபவிக்கலாம் என்று கூறி அனுப்பிவிட்டார்.


                                                                   
                                        அடுத்த வந்த நபரிடம் உங்களுக்கு என்ன வரம் வேண்டும்? என தர்ம தேவன் கேட்க 2ம் நபர் " நான் இது வரை நரகத்தை பார்த்தது இல்லை. நான் நரகத்தை பார்க்க வேண்டும் என விரும்புகிறேன்" என கூறினார். அதற்க்கு தர்ம தேவன் "தேவையில்லை .உங்கள் புண்ணிய காலம் முடிந்து நரக வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. நீங்கள் நேரடியாக பூமிக்கு செல்ல லாம்." என கூறி அனுப்பிவிட்டார்.

                                                             இப்போது 3ம் நபர் தர்ம தேவனிடம் " நான் சொர்க்க வாழ்க்கையை தொடர்ந்து அனுபவிக்க என்ன செய்ய வேண்டும் என்ற இரகசிய த்தை நன்றாக தெரிந்து கொண்டுவிட்டேன். அது மட்டுமன்றி நரக வாழ்க்கையி லிருந்து விடுபடும் தேவ ஞானத்தை பற்றி நன்கு அறிந்து கொண்டேன். ஆகையால் நீங்கள் என்னை எங்கு அனுப்பினாலும் எனக்கு சம்மதமே. மேலும் நரக வாழ்க்கை யை உடலாலும் மனதாலும் அனுபவித்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு இந்த தேவ ஞானத்தை கற்றுத்தருவதற்க்கு எனக்கு வாய்ப்பும் நல்லாசியும் வழங்குங்கள்." என கேட்டார். அதற்க்கு தர்ம தேவன் மனமகிழ்ச்சியுடன் "எமது பூரண நல்லாசிகள்  உமக்கு உண்டு.நீங்கள் பூமிக்கு செல்லுங்கள்" என்று கூறி அனுப்பிவிட்டார்.

                                                           இந்த காட்சிகளை கண்ட சிவனாடியார்கள் மிகவும் ஆச்சர்யமடைந்தனர். இறைவா இதுஎன்ன விந்தை? தர்ம தேவனின் தீர்ப்புகள் எதுவும் எங்களுக்கு புரியவில்லை? அனைவரையும் அவர் பூமிக்கே அனுப்புகி றாரே? உண்மையில் அவர்கள் பூமியில் எப்படிபட்ட வாழ்க்கை வாழ்கின்றார்கள் என்பது எப்படிதெரிந்து கொள்வது? என கேட்டனர். அதற்க்கு சிவ பெருமான் "மனிதன் உடல் ரீதீயாகவும் மன ரீதீயாகவும் ஏதோ ஒருவகையில் பாதிப்பு அடைகின்றான்.பூமியில் அவன் சோர்த்து வைத்திருக்கும் எந்த சொத்துக்க ளினாலும் அந்த பாதிப்புகளை சரி செய்ய முடியாது. இதில் மனிதர்கள் அடையும் வேதனைகளையும் வலிகளையும் வார்த்தைகளில் அடுக்க முடியாது. எனினும் மனிதர்கள் பூமியில் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கினறனர் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் சித்தர்களிடம் சென்று தெரிந்து கொள்ளுங்கள். ஏனெனில் சித்தர் பெருமக்களே மனிதர்களின் மேன்மை க்காக தங்களின் வாழ்க்கையை அர்பணித்தவர்கள்.அவர்களில் சித்தர்களின் தலைவரான அகத்தியனிடம் சென்று மனிதர்கள் பூமியில் எப்படிப்பட்ட வாழ்க்கை யை வாழ்ந்து கொண்டிருக்கினறனர் என்பது பற்றியும் அதற்க்கான அடையாள ங்களை பற்றியும் கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள் " என்று அனைவரையும் அகத்தியரிடம் அனுப்பி வைத்தார்.

                                                 அகத்தியரிடம் சென்று விஷயத்தை கூறிய சிவனடியார்கள் இதற்கு விளக்கம் தரும்படி கேட்டுக்கொண்டார்கள். அதற்கு ஒப்புக்கொண்ட அகத்தியர் எல்லாம் வல்ல பரம்பொருளை தியானித்துக்கொண்டு பூமியில் சொர்க்க மற்றும் நரக வாழ்க்கையின் அறிகுறிகளை விளக்க ஆரம்பித்தார். பூமியில் பிறக்கும் மனிதன் உடல் மற்றும் மனம் என இருவகையாக பாதிப்பை அடைகின்றான்.முதலில் உடல்ரீதீயாக காண்போம்.மனிதன் உடல்ரீதீயாக நரக வாழ்க்கையை அனுபவி த்துக்கொண்டிருப்பது ஆரம்பத்தில் அவர்களுக்கு தெரிவதில்லை. உடலில் வலி வந்த பிறகே அவர்கள் அதை உணரத்தொடங்குகின்றனர். மேலும் ஒருவர் உடல்ரீதீயாக எந்த வாழ்க்கையை வாழ்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடியும். ஒருவரின் மண்ணிரல் மற்றும் கல்லீரல் அமைந்திருக்கும் பகுதியில் லேசாக அழுத்திப்பாருங்கள்.(இவ்விடங்கள் முன்புற மார்புக்கூட்டின் கீழே உள்ளது)லேசாக அழுத்தும்போதே வலி இருந்தால் உங்கள் உடலானது கடுமையான நரக வாழ்க்கைக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம்!

                                                                 அகத்தியர் தரும் விளக்கம், உணர்வு ரீதியாகவும், உடல் ரீதியாகவும், இவ்வுலகத்தில் மானிடர்கள் நரகவாழ்வை அனுபவிக்கின்றார்கள் என்பதை தெளிவாக விளக்குகின்றது. மோட்சம், நரகம் என்பது  Fear and Greed பயம் , இன்பம் என்ற உணர்வுகளின் அடியில் இருந்து நமக்கு கற்பிக்கப்பட்டிருக்கின்றது. எனக்கு நல்ல ஞாபகம் இருக்கின்றது. சின்ன வயதில், சமய பாட புத்தகதில், இரண்டு உள்ளங்கள் சித்தரிக்கப்பட்டிருக்கும், ஒன்றில் சாத்தான் இருப்பான், அது நரகமாகவும், தூதுதர் இருப்பது மோட்சமாகும், ஆக மோட்சம் நரக‌ம் என்பது நமது உள்ளத்தில் இருக்கின்றது என்பதுதான் அர்த்தம்.

                                                                     ஒருமுறை, ராபியா என்ற சுஃபி பெண் ஞானி, ஒருகையில், நெருப்பு பந்தத்தையும் இன்னொரு கையில் வாளியில் தண்ணீருடன் வீதியில் அலைந்தாள். பலர் அவளிடம் இதற்கு அர்த்தம் கேட்டார்கள். அவள் சொன்னாள், மனிதர்கள் மனதில் இருக்கும் மோட்சம் என்ற எண்ணத்தை இந்த நெருப்பாள், எரித்து அழிக்கப்போகின்றேன், நரகம் இருக்கும் மனிதரிடம், இந்த தண்ணீர் கொண்டு அணைக்கப்போகின்றேன், மனிதர்களின் மோட்ட்சம், நரகம் என்ற உணர்வு, இருக்கும் வரை, மனிதர்களின் உள்ளத்தில் உறைந்திருக்கும் கடவுளை அவர்களால், கண்டு கொள்ளமுடியாது என்று அவர்களிடம் சொன்னாள். இதில் பெரும் உண்மை இருப்பதாக நான் உணர்கின்றேன். ஆசை மயக்கத்தயோ, பய ஊணர்வையோ காட்டி, மனித மனதில் இறைவனை உணர்த்தமுடியாது, கடவுள் அன்பே உருவானவர், அன்பே கடவுள், பயத்தினால் அவரை அணுக முடியாது, அதை அவர் விருபுவதும் இல்லை.

                                                              என் வாழ்வில் நடந்த சுவையான சம்பவம் ஒன்று, ஞாபகத்துக்கு வருகின்றது, எனது மச்சான் ஒரு அருட்குரு, பெயர் லெம்பேட், நல்ல பிரசங்கி, அவர் லண்டனுக்கு வந்த போது, என் வீட்டுக்கு வந்தார், அப்போது எனது மகன், மதிவாணனுக்கு, எட்டு வயது இருக்கும், சரியான குழப்படி, சூப்பர் மேன் Supper man அவர்தான் இவன‌து ஹீரோ. எனது மகனின் குழப்படியை பார்த்த, ஜெறோம் லெம்பெர்ட் குரு, அவனை அழைத்து, நீ குழப்படி செய்தால், நரகத்துக்கு  போவாய் என்று பயம் காட்டினார். என் மகனுக்கு நரகம் என்றால், என்னவென்று புரியவில்லை, உடனே அவன், நரகம் என்றால் என்ன என திருப்பி கேட்க, குருவோ ஓ அதுவா அது பெரும் நெருப்பு கொண்ட ஒரு குகை என வர்ணித்தார், எனது மகனோ வெகு அலட்சியமாக, நெருப்பா! நான் சூப்பர்மேன் எந்த நெருப்பும் என்னை உன்னும் செய்யமுடியாது என சிரித்தான், என் போன்ற மகனுக்கு நெருப்பை காட்டி, நரகத்தை விளங்க வைக்கமுடியுமா? நீங்களே சொல்லுங்கள்! மோட்சம் நரகம் பற்றி அதிகம் கதைத்துவிட்டேன் என நினைக்கின்றேன், விட்டால் இன்னும் கதைக்கலாம், தொடரும் என் சிந்தனை,,,,,,

No comments:

Post a Comment