கலவியை தியானமாக செய்! பேசாலைதாஸ்
நீராடியபின் படுக்கை அறைக்குள் செல்லவும்.ஒரு கோயிலுக்குள் செல்வதுபோல..
அறையில் கண்கூசும் ஒளிகூடாது.மெழுகுவத்தி ஒளி,நறுமண பத்தி ஏற்றவும்.பின்னணியில் மென்மையான இசை..
குற்றவுணர்சி,இது ஒரு பாவச்செயல் என்று மதங்கள் மாசுபடுத்திய மனநிலை இல்லாமல்.இந்த இன்பம் தந்த கடவுளுக்கு நன்றிசெலுத்தும் மனநிலையில் துவங்கவும்..
நன்றிஉணர்வுடன் துவங்கவும்.
அவசரம் வேண்டாம்..
இங்கு ஆண்,பெண் தவிற இருவரின் சாட்சித்தன்மையையும் சேர்த்து நால்வர் எனும்படி விலகி சாட்சி பாவத்தில் இருந்து இறுதிவரை இந்த சாட்சிதன்மை இருக்கும்படி நடந்துகொள்ளவும்.
ஒருவர் உடலில் ஒருவர் விளையாடி Foreplay தொடங்கவும்.ஆணின் பாலுணர்வு அவனுடைய ஆணுறுப்பில்மட்டுமே உள்ளது.ஆனால் ஒரு பெண்ணுடைய பாலுணர்வு அவள் முழுஉடலிலும் பரவி உள்ளது.இதை கவனத்தில் வைத்து தொடங்கவும்...இந்த Foreplay சரியானதாக இருந்தால் இருவரும் உறவுக்கு ஒரேநேரத்தில் தயாராகிவிடலாம்..
சாட்சிதன்மை தொடரவேண்டும்..
எப்போதும் பெண்தான் மேல் இருக்க வேண்டும்.ஆண் இயங்கக்கூடாது அப்படி இயங்கத் தொடங்கினால் விரைவில் முடிந்துவிடும்..எல்லாம் சரியானபடி நடந்தால் இருவரும் ஒரேநேரத்தில் உச்சபரவசநிலையை அடையலாம்..இதுபோல் ஒரு பரவசத்தை முன்எப்போதுமில்லாத பரவசநிலையை வேறுபட்ட அனுபவத்தை உணரலாம்...இப்போதும் சாட்சிதன்மை தொடரவேண்டும்..உங்கள் உடல் இயக்கத்தை விலகியிருந்து கவனிக்க வேண்டும்.எந்த நிலையிலும் உடலுடன் அடையாளப்பட்டுவிடக்கூடாது..
உச்சநிலை அடைந்தபின் உடனடியாகப் பிரிவு கூடாது.
துவங்குவதற்க்குமுன் Foreplay விளையாடியதுபோல் இப்போதும் Afterplay ஆடவேண்டும்..இது மிகமுக்கியமான கட்டம் உங்களுக்கு சிகரத்தில் அனுபவித்த உச்சநிலைதான் தெரியும் ஆனால் இப்போது அதைவிட வேறபட்ட வித்தியாசமான அதிஉன்னத உச்சகட்டம் தானேநிகழத்தொடங்கும் இது பள்ளத்தாக்கு உச்சகட்டம்..ஒவ்வொரு சிகரத்திற்கும் அடுத்து பள்ளத்தாக்கு உண்டு..ஒருவர் உடலை ஒருவர் Massage செய்யலாம்..நடனமாட தோன்றினால் ஆடலாம்..
இதை முறைப்படி சிலகாலம் கடைபிடித்தால்..
ஒருபெண் இல்லாமல் அதுபோல இரவு நேரத்தில்,
அதே அறையில்,
அதே மெழுகு ஒளியில்,
அதேபத்தி நறுமணத்தில்,
அதே இன்னிசை பின்னனியில் அதே மனநிலையைமட்டும் உன்மனதில் நினைத்தால் போதும்...அந்தப் பெண்,அல்லது அந்த ஆண் இல்லாமலேயே அப்போது நீ அனுபவித்த உச்சகட்ட இன்பம் உன்னை சூழ்ந்து ஆட்கொண்டு அரவணைக்கும்..இனி அவள் இல்லாமலேயே உனக்கு பரவசம் ..இதற்க்காகத்தான் சாட்சித்தன்மை வலியுறுத்தப்படுகிறது.

No comments:
Post a Comment