அன்பின் புரட்சி தைரியம்
🌸 இதை நீங்கள் நன்றாக
புரிந்து கொள்ள வேண்டும்.
ஒருவர் உண்மையை நோக்கி
நகர வேண்டுமானால்,
தன்னுடைய நேசத்தை வெளிப்படுத்தி,
அது உண்மையான நேசமா?
அல்லது போலித் திரையா? என்று கண்டுபிடிக்க வேண்டும்.
அது போலித் திரைதான் என்கிற
உண்மையை அவரால்
பார்க்க முடிந்தால்...
"அன்பில்லாமல் இனியும்
ஒரு வினாடி கூட வாழ முடியாது என்பதைக் கண்டறிய முடியும்."
🌸 அந்த தீவிரமான உணர்வு,
அந்த மாதிரியான வலி,
அந்த ஏக்கம்,
அவருடைய இருத்தலில் எழும்.
காரணம்,
அவர் வாழ்க்கையில் அன்பு இல்லை.
அவருடைய இருத்தலில்,
அதிகமான அன்பின் தாகம் எழும்.
அவர் எப்படியாவது அன்பைக்
கண்டுபிடிப்பார்.
எங்கிருந்தாலும்,
அதை அவர் எழுப்ப வேண்டும்.
🌸 நாம் அன்பை மறைத்துக் கொண்டிருக்கும் வரை,
இந்த போலியான அன்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் வரை,
நாம் முழு அன்போடுதான் இருக்கிறோம் என்கிற மயக்கத்திலேயே இருப்போம்.
அதனால்தான் ஒருவரால்
உண்மையான அன்பை
அறிய முடியவில்லை.
அதனால் அன்பு பிறக்க முடியாது.
போலியான அன்பு,
உண்மையான அன்பு பிறக்க அனுமதிக்காது.
🌸 உங்கள் குடும்பங்களே பொய் என்று நான் சொல்கிறேன்.
குடும்பம் என்கிற
இந்த அமைப்பே பொய்.
"அதில் எங்குமே அன்பு இல்லை.!"
"நமது பொய்களுக்கு அந்த மாதிரி வடிவம் கொடுத்திருக்கிறோம்.
நம் பொய்களுக்கு அப்படி ஒரு முகங்களை கொடுத்திருக்கிறோம்."
🌸 உண்மையில் நமது குடும்பங்கள்,
நம் தாம்பத்ய உறவுகள்,
நமது பெற்றோர்கள்,
நமது குழந்தைகள்,
"யாரிடமும் அன்பு உள்ளுக்குள் இல்லை.!"
🌸 இதுதான் அன்பு என்று
நாம் நினைத்துக் கொண்டே போனால்,
எப்படி ஒரு மாறுதல் நடக்கும்?
அகிம்சை என்கிற போர்வையில்
நாம் வன்முறையை மறைத்துக் கொண்டே போனால்,
எப்படி ஒரு மாறுதல் நடக்கும்.
பிறகு எப்படி ஒரு புரட்சி ஏற்படும்?
பிறகு வாழ்க்கை எப்படி மாறும்?
🌸 வாழ்க்கையின் உண்மைகளை
நாம் பார்க்க வேண்டும்.
"ஒவ்வொரு நபரும் தன்னை உண்மையாக வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும்.!"
"தன்னை தன் மொத்த நிர்வாணத்தில் பார்க்க வேண்டும்."
பிறகுதான் அவர் ஆன்மீகத்தை நோக்கி பயணிக்கவே முடியும்.
பிறகுதான் தெய்வீகத் தன்மையின் திசையை நோக்கி அடி எடுத்து வைக்க முடியும்.
பிறகுதான் அவருடைய கண்கள் உண்மையை நோக்கி திறக்கும்.
No comments:
Post a Comment