கடவுள் உங்கள் உள்ளே தான் இருக்கிறார்
தனிப்பட்ட மனிதனிடம்
நீங்கள் ஏதாவது கேட்டால்,
சற்று சிந்தித்து பிறகு
பதில் சொல்வான்.
மக்களின் கூட்டத்தில்
நீங்கள் அதே கேள்வியை கேட்டால்,
ஒருவர் ஒரு பதில் சொல்லி
அவரது 'கை ' யை தூக்கினால்,
கூட்டம் முழுவதுமே அதற்கு 'கை ' தூக்கி விடும்.
மக்கள் கூட்டத்தில்,
பிறரை பின்பற்றும் போக்கு
இயல்பாகவே இருக்கிறது.
கூட்டத்தினர் எவரும் சுயமாக முடிவெடுக்க விரும்புவதில்லை.
அந்த 'திறன்' கூட்டத்தினரிடம் இல்லை.
மக்கள் கூட்டம் ஆடுகளை போன்றது.
ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியர்
கணக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
ஒரு சிறுவனை எழுந்து நிற்க சொல்லி,
அவனிடம் ஒரு கணக்குக் கேட்டார்.
'பத்து ஆடுகள்
வேலிக்குள் மேய்ந்து கொண்டிருக்கின்றன.
அதில் ஐந்து ஆண்டுகள் வேலியை தாண்டி வெளியே குதித்து ஓடி விட்டன.
மீதம் வேலிக்குள் எத்தனை ஆடுகள் இருக்கும் ? '
அந்த சிறுவன் உண்மையிலேயே
ஆடுகள் மேய்க்கும் கூட்டத்தை சேர்ந்தவரின் மகன்.
' ஒரு ஆடு கூட இருக்காது '
என்று பதில் சொன்னான்.
ஆசிரியருக்கு கோபம் வந்து விட்டது.
' ஒரு சின்ன கணக்கு.
இது கூட தெரியவில்லையா ? ' என்று அதட்டினார்.
சிறுவன் அமைதியாக சொன்னான்,
' சார், எனக்கு கணக்கு பற்றி நன்றாகத் தெரியும்.
உங்களுக்குத்தான் ஆடுகளை பற்றி ஒன்றும் தெரியவில்லை.
கூட்டத்தில் ஒரு ஆடு வேலியை தாண்டி குதித்தால்,
மற்ற எல்லா ஆடுகளும் வேலியை தாண்டி போய்விடும்.
வேலிக்குள் ஒரு ஆடு கூட இருக்காது. ' என்றான்.
கணக்கு ஒரு கற்பனை.
அவனது பதில் ஒரு உண்மை.
உண்மையில்,
உன் சொந்த இதயம் தான்
உனது ஒரே நீதிபதி.
உனது கணக்கு உனக்கு தவறு போல் தோன்றினாலும்,
உனது உட்புற குரலை கேள்.
கடவுள் அங்கேதான் இருக்கிறார்.
***
' கடவுள் உங்கள்
உள்ளே தான் இருக்கிறார் '
No comments:
Post a Comment