Friday, 27 September 2024

பாதை சரியாக இருந்தால் '

பாதை சரியாக இருந்தால் '
" உங்களது வாழ்க்கை தரம் மோசமாக இருக்கிறது ' என்று நீங்கள் நினைத் தால், ஒன்றை உறுதி செய்து கொள்ளுங்கள், அதற்கு காரணம் நீங்களே தான்.
வேறு யாருமல்ல. காரணம், உங்களை சுற்றியுள்ளவர்கள் உங்களிடம் பலவ ற்றை எதிர்பார்க்கிறார்கள். அதற்காக எதை எதையோ,  உங்களுக்கு சாதக மாக உங்களிடம் சொல்லி, உங்களை தயார் படுத்துகிறார்கள். நீங்களும் அவர் களது எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டும் என்று புறப்பட்டு செல்கிறீர்கள்.
அதில்தான் உங்களது முன்னேற்றமும் இருப்பதாக உங்களுக்கு தவறாக போதி க்கப் பட்டிருக்கிறது. உங்கள் மனைவியோ அல்லது பிள்ளைகளோ உங்களது உண்மையான நலம் விரும்பிகள் சொல்வதை கேட்காமல் புறப்படுகிறீர்கள்.
ஏனென்றால், அந்த கூட்டம் மிக வலிமை வாய்ந்தது. இந்த சூழ்நிலையும்,
மனநிலையும்
 உங்களுக்குள் இருந்தால்,
நீங்கள் எந்த நாளும்
உங்களது வாழ்க்கையில் 
நிறைவடைய மாட்டீர்கள்.
நீங்கள் எதற்காக வந்தீர்கள் ?
உங்களது கடமை என்ன என்பதை கண்டு பிடிப்பதே
உண்மையான 
ஆன்மீகத் தேடல்.
அதை விடுத்து,
அடுத்தவர்களின் 
சூழ்ச்சி அம்புக்கு 
பலியாகி கொண்டிருந்தால்,
ஒரு நாள் நீங்கள் 
மனோதத்துவ 
வல்லுனரை தான் தேடிப் போக வேண்டும்.
சொன்னது ஒருவர்,
செய்வது ஒருவர்.
வழித் தேடுவது மற்றொருவரிடம்.
இந்த 
பைத்தியக்கார தனம் தான்
எப்போதுமே
உங்களை முன்னேற விடாமல் செய்கிறது.
பெரும்பாலானோர் மோசமான நிலையில்தான் இருக்கிறீர்கள்.
ஒருவரை திருப்தி படுத்த
உங்களையே இழக்கிறீர்கள்.
ஏனென்றால்,
யாருமே உங்கள் உள்ளேயிருந்து வரும் குரலை கேட்க விரும்புவதில்லை.
நீங்கள் நீங்களாக இருக்க வேண்டும் என்று நினைப்பதில்லை.
அடுத்தவர்களின் கைப்பாவையாக இருப்பது
உங்கள் மனதுக்கு பிடித்திருக்கிறது.
ஒரு முறை 
முல்லா நஸ்ருதின்
ஒரு நீண்ட அங்கியை அணிந்து கொண்டு,
நீண்ட தாடியுடன்
ஒரு மனநல மருத்துவரை பார்க்கப்போனார்.
அவரை பார்த்து 
அந்த மனநல மருத்துவர்,
' முல்லா,
நீங்கள் பார்ப்பதற்கு
 ஒரு ஓவியரை போலவே இருக்கிறீர்கள்.
உண்மையில் நீங்கள் 
ஒரு ஓவியரா ? ' என்று கேட்டார்.
அதற்கு முல்லா,
' இல்லை. 
நான் ஓவியன் இல்லை ' என்றார்.
' பிறகு ஏன் நீங்கள்
இந்த ஓவியரின் அடையாளத்தில் இருக்கிறீர்கள் ? ' என்றார் மருத்துவர்.
' அதை கேட்கத்தான் நான் உங்களிடம் வந்தேன்.
நான் எப்போதுமே ஓவியனாக இருக்க விரும்பியதில்லை.
எனது நண்பன் தான் 
நான் ஒரு ஓவியராக மாற வேண்டும் என்று விரும்புகிறான்.
இந்த அடையாளத்தையும்
எனக்கு கொடுத்திருக்கிறான்.
அது ஏன் என்று கேட்கத்தான்
உங்களிடம் வந்திருக்கிறேன். ' என்றார்.
                        ***
' பாதை சரியாக இருந்தால் '

No comments:

Post a Comment