இயல்பாக விட்டு விடு
அமெரிக்காவில்
சில இடங்களில்
' உடலுறவில்
உச்சநிலையை அடைவது எப்படி ? ' என்று சொல்லித்தருகிறார்கள்.
இதெற்கெல்லாம்
' டியூஷன் சென்டர் ' அங்கு இருக்கிறது.
போதனை மூலமாக,
நீங்கள் உச்ச நிலையை அடைந்தால்,
அது உண்மையான உறவாக இருக்குமா ?
மனிதர்கள் எதிர்காலத்தை நினைத்து,
நிகழ்காலத்தை தவற விட்டு விடுவது போல்தான் இதுவும் அமைந்து விடும்.
உச்ச நிலை ' எப்போது வரும் ?
என்ற எதிர்பார்ப்பிலேயே,
ஒருவரது உறவு முடிந்து போய் விடும்.
எப்படி தூங்க வேண்டும் என்று யாருக்காவது
சொல்லிக் கொடுக்க முடியுமா ?
' இப்போது ' பிராட்டிக்கல் ' வகுப்பு.
அனைவரும் படுத்துக் தூங்குங்கள் ' என்றால்,
அந்த நேரத்தில் தூக்கம் வருமா ?
தானாக வருகிற தூக்கமும்,
அதன் பிறகு வராது.
' இப்படிதான் சுவாசிக்க வேண்டும் ' என்று யாருக்கும்
தனி வகுப்பு எடுத்து
பாடம் நடத்த முடியாது.
விலங்குகள் எந்த போதனையும் இல்லாமல்
உறவின் உச்சத்தை இயல்பாக தொடுகின்றன.
அதற்கு புத்தகங்கள்
தேவையில்லை.
வல்லுநர்களின் அறிவுரைகள் தேவையில்லை.
உறவு நிலைகள் எல்லாவற்றையும்
' இயல்பாக ' விட்டு விடும் போதுதான் உண்மையான உச்சம் வரும்.
அதை யாருக்கும்
சொல்லித்தந்து அடைய வைக்க முடியாது.
உங்கள் மனம் தெளிவாக எதிர் நோக்கும்போது,
நீங்கள் அதுபற்றிய
எந்த விதிமுறைகளையும் பின்பற்ற தேவை இல்லை.
No comments:
Post a Comment