அஷ்டாவக்ர மகா கீதை
அஷ்டாவக்ரர் கருத்துப்படி முனிவர்கள், மகாத் மாக்கள், யோகிகள் வெவ்வேறு கோட்பாடு களைச் சொல்வதால் ஆர்வமிழந்து அவற்றைப் புறந்தள்ளுபவன் குழப்பம் நீங்கி அமைதி பெறுகிறான். நாங்களும் அவ்வாறே உள்ளத் தமைதி பெற வேண்டும் என்பதற்காகவா முனி வர்கள், மகாத்மாக்கள், யோகிகள், அஷ்டா வக்ரர், புத்தர், பதஞ்சலி, சைதன்யர் ஆகிய எல்லோரின் பிரதிநிதியாக நீங்கள் வந்துள் 'ளீர்களா?
அப்படித்தான் நிச்சயமாக இருக்கும். எதிலிருந்து விடுதலை பெற வேண்டுமோ அதை முதலில் நன்றாக அறிந்திருக்க வேண்டும். தர்க்கத்தின் கவர்ச்சியிலிருந்து விடுபட தர்க்க இயலை அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் அதை வெல்ல, கடந்துசெல்ல முடியும். அறிவின் தாக்கத்தைக் கடக்கக் கூர்மையான அறிவு தேவை. பேரறிவாளன் அறிவுக்கு அஞ்சமாட்டான். அவனுக்கு அதன் எல்லைகள் தெரியும்; அதன் தந்திரங்கள் தெரியும். புத்தி விரிக்கும் மாயவலையில் அவன் சிக்கிக் கொள்ளமாட்டான்.
யார் எதைச் சொன்னாலும் நம்புபவன் அறிவின் கீழ்ப்படியி லேயே நிற்கிறான். அவன் ஒருவகையில் முட்டாள்தான். உறுதியான, அசைக்க முடியாத நம்பிக்கை (பற்றுறுதி) உள்ளத்தில் அமையப் பேரறிவு தேவை. புத்தியின் எல்லாப் படிகளையும் கடந்து மேலேறியவன் பற்றுறுதி பெறுகிறான்.
எடுத்த எடுப்பிலேயே ஒருவன் உண்மையான ஆத்திகன் ஆகமுடியாது. நாத்திகனாக சிறிது காலமாவது இல்லாமல் யாரும்
ஆத்திகன் ஆனதில்லை. அதை வெளியே சொல்வதில்லை என்பது வேறு விஷயம்.
எடுத்த எடுப்பிலேயே மேற்கொள்ளப்படும் ஆத்திகம். உறுதியாக இருக்காது. சூடேற்றாத களிமண் பானை போன்றது அந்த ஆத்திகம்.
போலி ஆத்திகம் கண்டு ஏமாறாதே. அந்தப் பானையில் தண்ணீர் நிரப்பி எடுத்துவர முடியாது. வீட்டை அடைவதற்குள் பானையும் இருக்காது; தண்ணீரும் இருக்காது. பானை உறுதியாவதற்கு அக்னி பிரவேசம் செய்யவேண்டும்.
இவ்வுலகின் தலைசிறந்த ஆத்திகர்கள் நாத்திக நெருப்பின் ஊடாகத்தான் பயணித்து முன்னேறியிருக்கிறார்கள். இது சரியான வழி என்றே தோன்றுகிறது 'இல்லை' என்று தைரியமாகச் சொல்லவராதவன் 'உண்டு' என்று சொன்னால் அதில் வலு இருக்காது. அதில் இயலாமைதான் அதிகம் பிரதிபலிப்பாகும்.
வலுவான பற்றுறுதி உள்ளவன் முடிசூடா மன்னனாகிறான். அவன் தன்னை எங்கும் பாவியிருப்பவனாக உணர்கிறான். பற்றுறுதி அவனுக்கு விசேஷ வலிமை தருகிறது. பற்றுறுதி பரிசாக அளிக்கும் பேரரசில் சூரியன் ஒருபோதும் மறைவதில்லை. ஏனெனில் அங்கு இருட்டு என்பது கிடையாது. எல்லாம் ஒளிமயம்தான்.
நாத்திகத்தை ஆத்திகத்திற்கு ஏற்றிவிடும் தவிர்க்க முடியாத படிக்கட்டு அல்லது ஏணி எனலாம். இல்லையென மறுப்பதால் புதிதாகக் கற்பது சாத்தியப்படுகிறது. அப்போதுதான் நாம் சொல்லும் 'உண்டு' என்பது அர்த்தமுள்ளதாகிறது. எடுத்த எடுப்பிலேயே ஒருவன் எல்லாவற்றுக்கும் 'ஆமாம் சாமி' என்று சொல்லிவந்தால் அந்த 'ஆமாம்' என்பதற்கு என்ன மதிப்பு இருக்க முடியும்? சில சமயம் முதலில் 'இல்லை' என்று சொல்லத் தெரிந்தவனின் பிற்கால 'ஆமாம்' என்பது மதிப்புடையதாக, கவனிக்கத் தக்கதாக இருக்கும்.
உலகில் இரண்டு வகையான ஆத்திகர்கள் உள்ளனர். ஒருவகையினர் பயத்தின் காரணமாக ஆத்திகர்களாக உள்ளனர். அவர்களின் உள்ளத்தின் ஆழத்தில் நாத்திகம் குடிகொண்டிருக்கிறது. அவர்களது ஆத்திகம் மேலோட்டமானது. சாதாரணப் பூச்சு போன்றது. சற்றுச் சுரண்டினால் போதும். உள்ளேயிருக்கும் நாத்திகம் தென்படும்.
உனக்குக் கடவுள்மேல் உள்ள பற்று ஆனந்தத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். உன் இறையன்பு கொடுக்கல் - வாங்கலை ஆதாரமாகக் கொண்டிருக்கக் கூடாது. நீ வேண்டுவது யாசகமாக இருக்கக்கூடாது. கடவுளெதிரில் நீ பிச்சைக்காரனாக நில்லாதே. இது வேண்டும் - அது வேண்டும் என்று பட்டியல் தராதே.
உனக்கும் இறைவனுக்கும் இடையே பிரவாகமாகிப் பாசம் நேசம் பெருக்கெடுத்துப் பாயட்டும். உங்களிருவருக்கும் இடையே தேவ இசை ஒலிக்கட்டும். உனது வீணையுடன் அவரது வீணையும் மீட்டப்படட்டும். உனது வாய்ப்பாட்டுடன் அவரது சுருதி சேரட்டும். உனது உயிர்த் துடிப்பு அவரது இசையில் தாளக்கட்டுடன் நடனம்போல் கேட்கட்டும். எதுவும் வேண்டுமென்றோ, எதுவும் வேண்டாமென்றோ வரம் கேட்கும் நிலையைக் கடந்த பிறகே உண்மையான பக்திநிலை, பற்றுறுதி ஏற்படுகிறது. நாத்திக வாதத்தைக் கடந்த பின்னரே இந்நிலை வாய்க்கும்.
No comments:
Post a Comment