ரகசியமாய் சில ரகசியங்கள்
தேர்ந்தெடுக்கப்பட்ட சீடர்களிடம் மட்டும் !! 💦
🍁 அனுபுத்தா பாரதி என்னும்
உங்கள் துறவிகளில் ஒருவர்,
சிகாகோவில் எங்களுடன்
தங்கி இருக்கிறார்.
அவரது முழு வாழ்க்கையும்,
உங்களால் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
அவரை விட்டு விரைவில்
நீங்கள் செல்வதால்
அவர் மிகவும் கவலையோடு இருக்கிறார்.
நான் மீண்டும் திரும்பச் செல்லும் போது
அவரிடம் என்ன சொல்ல வேண்டும் ?
ஓஷோ
🌸 நான் என் உடலை விட்டு விட்டு
சென்றாலும்,
என் துறவியரை நான் விட்டுவிட மாட்டேன், என்று சொல்லுங்கள்.
"இப்போது இங்கே நான் எப்படி
கிடைக்கப் பெறுகிறேனோ...
அதேபோல் அப்படியே
அப்பொழுதும் கிடைப்பேன்.!!!"
"நீங்கள் எனக்கு கிடைப்பீர்களா ?"
என்பது தான்,
நீங்கள் நினைவு கொள்ள வேண்டிய
ஒரே விஷயம்.
நான் உங்களுடன் இருப்பேன்.
🌸 எப்பொழுதுமே, உங்களுக்கு
கிடைப்பது போல தங்கி இருப்பேன்.
நீங்கள் எனக்கு கிடைத்தால்,
அப்போது நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை.
அப்போது ஒரு இணைப்பு இருக்கிறது.
என் துறவியருடன்,
நான் தனி நபர்த் தன்மையுடன்
இணைக்க பெற்றுள்ளேன்.
நீங்கள் ஓர் இயக்கத்தில் இணைக்கப்பட்டுள்ளீர்கள்.
அது பொருள் அன்று.
இது ஒரு நிறுவனமே அன்று.
இது தனிப்பட்ட உறவு.
"இது ஒரு காதல் விவகாரம்.!!!"
🌸 நீங்கள் எனக்கு,
வெளிப்படையாக இருந்தால்...
இந்த உடல் மறைந்து விட்டாலும் கூட,
எந்த வித்தியாசமும் இருக்கப்போவதில்லை.
நான் உங்களுக்கு கிடைக்கப் பெறுவேன்.
அவர் பயப்பட வேண்டாம் என்று சொல்லுங்கள்.
அவர் நம்பிக்கையுடனும், அன்புடனும், இருக்கலாம் என்று சொல்லுங்கள்.
No comments:
Post a Comment