Saturday, 14 September 2024

 கிரிபாலா 

          நீண்ட நாட்கள் உணவு உண்ணாமலும் திரவங்கள் அருந்தாமலும் உயிர் வாழ்வது ஞானிகளுக்கும் சித்தர்களுக்கும் மட்டும் எப்படி சாத்தியமாகிறது?

நீங்கள் “ஒரு யோகியின் சுயசரிதம்” [ Autobiography of a Yogi.[1] ] என்ற புத்தகத்தை வாசித்திருக்கிறீர்களா ? அதில் ஒரு சம்பவம் வரும்.

அதில் கிரிபாலா என்ற பெண்மணி யோகத்தின் மூலமாக வாழ்நாள் முழுவதும் ஆகாரமும் நீரும் அருந்தாமல் உயிர் வாழ்ந்து இருப்பார்.

கிரிபாலா சிறுமியாக தன் பெற்றோருடன் வசிக்கும் பொழுது அதிக வேளைகள் உண்ணும் பழக்கம் கொண்டவராக எப்பொழுதும் உண்டு கொண்டே இருப்பார்.

இதை பார்த்த அவரது தாயார் கண்டித்திருக்கிறார். முக்கியமாக நீ கல்யாணம் முடிந்து புகுந்த வீட்டுக்கு செல்லும் போது இப்படி சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் அங்குள்ளவர்கள் உன்னை பற்றி என்ன நினைப்பார்கள் ?என்று சொல்லியுள்ளார்.

சிறுமியான கிரிபாலாவோ அப்போது பார்த்துக்கொள்ளலாம் என்று விளையாட்டுத்தனமாக சொல்லிவிடுவாள்.

அக்காலங்களில் மிகச் சிறிய வயதிலேயே பெண்களுக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள் அது போல கிருபாலாவுக்கும் மிக விரைவில் திருமணம் ஆகிவிடுகிறது.

சொல்லவும் வேண்டுமா அக்காலத்திலும் மாமியார் மருமகள் சண்டைகள் சச்சரவுகள் இருந்துள்ளது.

கிரிபாலாவும் அதற்கு விலக்கு அல்ல. சண்டையின் போது மாமியார் கிரிபலாவின் அடிக்கடி உணவு உண்ணும் பழக்கத்தை மிகவும் தரக்குறைவாக விமர்சித்துள்ளார்.

கிரிபாலாவும் ஒரு உணர்ச்சி வேகத்தில் இன்றிலிருந்து என் வாழ்நாள் முழுவதும் உணவை உண்ண மாட்டேன் நீரும் பருகமாட்டேன் என்று சபதம் செய்கிறார்.

சண்டையின் உச்சத்தில் மாமியார் சண்டையை நிறுத்திவிட்டு கிண்டல் செய்துவிட்டார் எப்படி உன்னால் இருக்க முடியும் உன்னால் அடிக்கடி சாப்பிடாமல் இருக்க முடியாதே என்று.

கிரிபலாவின் புகுந்த வீட்டு குடும்பத்திற்கு காசியில் குடும்ப பரம்பரை வழிமுறை வழிமுறையாக ஒரு குருவின் ஆசிரம தொடர்பு இருந்து வந்துள்ளது.

அங்கே அவரின் குரு சூட்சமவழிமுறையில் கிரியா யோகா அதாவது ஒரு சுவாச பயிற்சி மற்றும் மந்திரத்தின் மூலமாக சாப்பாடு இல்லாமல் உயிர்வாழும் ஒரு வழிமுறையை சொல்லிக் கொடுத்துள்ளார்.

நன்றி : “ஒருபோதும் சாப்பிடாத ஒரு பெண் யோகி” ( கிரிபாலா ) : விக்கிபீடியா ஒரு யோகியின் சுயசரிதம் அத்தியாயம் எண் 46.[3]

கிரிபாலா அம்மையாரின் சொந்த வாக்குமூலம்.

சுமாரான ஒரு தமிழாக்கம்.

“12 வயது நான்கு மாதத்தில் இருந்து தற்போதைய 68 வயது வரை, கிட்டத்தட்ட 56 வருடங்கள் நான் சாப்பிடவோ, நீராகாரமோ எடுத்துக் கொண்டதில்லை.”

மகான் பரமஹம்ச யோகானந்தர் எவ்வளவோ கேட்டும் இந்த அரிய யோக கிரியை கிரிபாலா அம்மையார் வேறு யாருக்கும் சொல்லிக் கொடுக்கவில்லை.

நாம் இப்பொழுது வேறு ஒரு யோக கிரியை மூலம் இப்படி உண்ணாமல் நீர் அருந்தாமல் இருக்கும் ஒரு வழிமுறையை பற்றி தெரிந்துகொள்வோம்.

அதன் பெயர் கேசரி முத்திரை. [ Kechari Mudra.[5] ]

இது ஒரு தகுந்த குருவின் வழிகாட்டுதலின் படியே செய்ய வேண்டிய ஒன்றாகும் அதாவது நாக்கை மடித்து அண்ணாக்கை தொட வேண்டும்.

நமது மண்டையில் இருந்து ஒரு திரவம் இந்த அண்ணாக்கு வழியாக சொட்டுச் சொட்டாக வந்து கொண்டே இருக்கும் அப்படி அதன் மூலமாக தான் நமக்கு உடல் சார்ந்த பசி தூக்கம் மற்ற தேவைகள் ஏற்படுகிறது.

இதை இந்த கேசரி முத்திரை மூலமாக அடைப்போமானால் நமக்கு பசி தாகம் மற்ற உடல் சார்ந்த தேவைகள் நீங்கி விடும்.

இந்த யோகப் பயிற்சியின் நோக்கம் மேலான ஆன்மிக அனுபவத்தை பெறுவதற்காக தான்.

இதே கருத்தை பிரபல மகான் சுவாமி சிவானந்தர்[6] அவர்களும் கூறியுள்ளார்.

இந்த முத்திரையை ஒருவர் பயிற்சி செய்து வந்தால் அவர்களுக்கு மயக்கம், பசி, தாகம், சோம்பல், வியாதி, வயோதிகம், மரணம் மற்றும் விசம் மூலம் ஏற்படும் மரணம் இவையெல்லாம் ஏற்படாது. முத்திரைகளில் மிகச்சிறந்தது கேசரி முத்திரை.

No comments:

Post a Comment