Tuesday, 3 September 2024

புரிதலுடன் கூடிய வாழ்க்கை!

 புரிதலுடன் கூடிய வாழ்க்கை! பேசாலைதாஸ்

உங்கள் உடம்பைக் கொன்று போட இரண்டு வழிகள் இருக்கின்றன 

ஒன்று :  மாஸோகிஸ்ட் போல் உடம்பைத் துன்புறுத்திக் கொள்வது 

மற்றொன்று : பணத்தையும் தேவையற்ற பொருள்களையும் சேர்த்துக் கொண்டே போவது 

கொஞ்சம் கொஞ்சமாய் அவன் சேர்க்கிற குப்பைகளே தடையாகி 

அவனை இப்படியப்படி நகரவிடாமல் செய்துவிடும் 

அவனால் பார்க்க முடியாது 

கேட்கவோ சுவைக்கவோ முடியாது 

ஏன் முகரவும் முடியாது 

எளிய வாழ்க்கை என்றாலே சிக்கலற்ற வாழ்க்கைதான் 

அது ஒன்றும் வருமையை வளர்ப்பதாகாது 

எளிமையான வாழ்க்கை என்பது 

ஆழ்ந்த புரிதலுடன் கூடிய வாழ்க்கையாகும் 

அது ஒன்றும் திருத்தம் செய்கிறதல்ல 

அது ஏழ்மை அடைவதற்கான பயிற்சியுமாகாது 

நீங்கள் ஏழையாயிருப்பதற்கு பயிற்சி செய்ய முடியும் 

ஆனால் 

அந்தப் பயிர்ச்சியின் மூலம் உங்கள் புலன்கள் கடினப்பட்டு விடும் 

நீங்கள் எதைப் பயிற்சி செய்தாலும் 

அது உங்களைக் கடினப்படுத்தி விடும் 

மென்மைத் தன்மையும், இளக்கத் தன்மையும் தொலைந்து போகும் 

அப்போது 

ஒரு குழந்தையைப் போல் எளிதில் வளையத் தக்கவராயிருக்க மாட்டீர்கள் 

ஒரு முதியவரைப்போல் விறைப்புற்று விடுவீர்கள் 

லாவோட்ஸு கூறுவார் : 

"விறைப்புத் தன்மை மரணம்

இளக்கத் தன்மை வாழ்க்கை" என்று 

எளிமையான வாழ்க்கை ஒன்றும் ஏழ்மையான வாழ்க்கையாய்ச் செய்துகொள்ள வேண்டியது அல்ல 

வறுமையை உங்கள் குறிக்கோளாக்கிக் கொள்ளாதீர்கள் 

உங்கள் உடலும் மனமும் பளுவற்றதாய்

எளிமையாய் இருந்துவிட்டால் 

பிரபஞ்ச இருப்பில் நீங்கள் ஊடுருவிச் செல்வதும் எளிதாயிருக்கும் 

பளுவை இறக்கி வைத்துவிட்டால் 

மெய்ப்பொருளுடன் நீங்கள் நேரடித் தொடர்பு கொண்டவராவீர்கள்

No comments:

Post a Comment