கையில் பணியாரம்
ஓர் உண்மையுள்ள இளைஞன் யூத பாதரியாரிடம் போனான்.
என்னுடைய பிரச்சனையே அதிக காமம் கிளர்ச்சி தான் ஐயா,
ஒரு பெண்ணோடு கைகுலுக்கினால் போதும் .
நான் உணர்ச்சிவசப்பட்டு விடுகிறேன்.
வழியில் அழகான ஒரு பெண் என்னை கடந்து போனால் போதும் அப்படியே நான் கிடந்து தவிக்கிறேன்.
எனக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது.
என் மனைவியை நான் உள்ளன்போடு நேசிக்கிறேன் !
ஒன்றும் பயந்து கொள்ளாதே மகனே!
உன் பசியை எங்கே தூண்டி விட்டுக் கொண்டால் என்ன?
வீட்டுக்கு வந்து சாப்பிட்டால் அது போதும்.
என்றார்.
அந்த பாதிரியார் அவர்தான் மிக சரியான ஆன்மீகவாதி .
எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளாதவர் .
வாழ்வை விளையாட்டாக எடுத்துக் கொள்கிறவர் .
என்னுடைய சந்நியாசிகளும் அப்படி வாழ்வை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு என்ன .
இரண்டு உலகங்களும் உங்களுடையதாகி போகும் .
கையில் பணியாரம்
வயிறும் நிரம்பி விடும்.
No comments:
Post a Comment