Friday, 13 September 2024

யோகியாகும் பாவி

யோகியாகும் பாவி

பாவிக்கு மகானாகும் யோக்கியதை உண்டா என்றா கேட்டாய்.....??? 

 சொல்கிறேன் கேட்டுக்கொள்

'இருக்கிறது.'

ஒரு பாவிக்கு மட்டுமே அந்த யோக்கியதை உண்டு

ஆனால் விழிப்பை உடன் கொண்டுவர வேண்டும் 

எனவே, நான் பாவத்தை நிந்திப்பதில்லை

நான் குறிப்புதான் தரமுடியும்

அது பாவம்தான்

ஆனால், தெளிந்த உணர்வோடு, சுதாரிப்போடு,

விழித்த மனத்தனாகச் செய்யும் பாவம்

என்ன வேண்டுமானாலும் செய்துகொள் 

மது குடிக்க வேண்டுமா....??? குடி.....!!!

ஆனால் சுதாரித்து இரு

வெகு சீக்கிரத்தில் அது முடியாது போகும்

மது குடித்தால் சுதாரிப்பு போய்விடுகிறது

சுதாரிப்பு போய்விடும்போது பாவம் மட்டுமே செய்கிறாய்.

அப்போது மகானாக ஆவதற்கு சாத்தியம் இல்லாது போய்விடுகிறது

குடித்துவிட்டு சுதாரிப்போடு இருக்கிறாயா....??? எவ்வளவு வேண்டுமானாலும் குடி......!!!

உனக்கு அது தண்ணீரே தவிர வேறொன்றும் ஆவதில்லை.....!!!

இயேசு தண்ணீரை மதுவாக மாற்றியதாகச் சொல்கிறார்கள்

நான் அதற்கு மறுதலையான வித்தையைச் சொல்லித் தருகிறேன். "மதுவைத் தண்ணீராக்குவது."

சுதாரிப்போடு இருந்துவிடு.....!!! 

பிறகு இயேசு செய்த அற்புதங்களை விடப் பெரிய அற்புதங்களை நீ செய்துவிடலாம்

"விழிப்போடு இரு. மது தண்ணீராகிப் போகும்"

"விழிப்போடு இரு. காமம் காதலாகிப் போகும்"

"விழிப்போடு இரு. காதல் பிரார்த்தனையாகிப் போகும்."

"விழிப்போடு இரு. பிரார்த்தனை தியானமாகிப் போகும்."

ஒன்றை மட்டும் நினைவில் வைத்திருந்தால் போதும்

"என்ன வேண்டுமானாலும் செய்துகொள். ஆனால் பூரண உணர்வோடு செய்.....!!! 

அப்படியிருந்தால் வழிதவறிப் போகமாட்டாய்"

No comments:

Post a Comment