கடவுளின் மொழி மௌனம்! பேசாலைதாஸ்
ஒரு முறை முல்லா நஸ்ருதீன்ஒரு காட்டின் வழியே போய்க்
கொண்டிருந்தார் அவர் ஒரு மண்டை ஓட்டைப்பார்த்தார்
அதனிடம் ஒரு கேள்வி கேட்டார் .ஐயா எது உங்களை இங்கே கொண்டு வந்தது என்றார். உடனே அந்த மண்டை ஓடு பேச்சுதான் என்னை இங்கே
கொண்டு வந்தது ஐயா என்றதும், முல்லா பிரமித்துவிட்டார்.
மண்டை ஓடு பேசியதை
அவரால் நம்பவே முடியவில்லை.
அரசவைக்கு ஓடினார்
நான் ஒரு அதிசயத்தைப்
பார்த்தேன் .ஒரு மண்டை ஓடு பேசுகிறது .நம்ம ஊருக்கு பக்கத்தில் இருக்கும் காட்டில்தான் அது கிடக்கிறது என்றார். அரசனாலும் அதை நம்ப முடியவில்லை
ஆனாலும் அவனுக்கும் ஆர்வம் ஏற்பட்டது.
சபையே மொத்தமாகக் கிளம்பியது.அவர்கள் காட்டுக்குள் போனார்கள்
நஸ்ருதீன் அந்த மண்டை
ஓட்டின் அருகில் போய்
மறுபடியும் அதே கேள்வியைக்கேட்டார்.
ஐயா, எது உங்களை இங்கே
கொண்டு வந்தது ஐயா.
ஆனால் மண்டை ஓடு மவுனமாக இருந்தது.
அவர் திரும்ப திரும்ப கேட்டார்
ஆனால் மண்டை ஓடோ வாயே திறக்கவில்லை.
அரசன் சொன்னான்
எனக்கு முதலிலேயே தெரியும்.நஸ்ருதீன் நீ ஒரு பொய்யன் .ஆனாலும்
இது ரொம்ப அதிகம்.
நீ செய்த குறும்புக்கு
தக்க தண்டனையை,
நீ அனுபவித்தாக வேண்டும்
முல்லாவின் தலையை வெட்டி அதை அந்த மண்டை ஓட்டின் பக்கம் எறும்புகள் தின்னும்படி வீசிவிடுங்கள்,
என்று தன் காவலாளிக்கு
கட்டளையிட்டான் மன்னன்
அரசன், அவனது பரிவாரங்கள்
எல்லோரும் போனபின்
மண்டை ஓடு மறுபடியும்
பேசத்தொடங்கியது.
எது உங்களை இங்கே
கொண்டு வந்தது ஐயா. என்று கேட்டது
அதற்கு நஸ்ருதீன்......
பேச்சுதான் என்னை இங்கே
கொண்டு வந்தது ஐயா என்று
பதில் சொன்னார்.
🌹பேச்சுதான் இன்றைய நிலைமைக்கு மனிதர்களை கொண்டு வந்திருக்கிறது
ஓயாமல் சல சலக்கும் மனம்
மகிழ்ச்சியை சிறிதும் அனுமதிக்காது.
மகிழ்ச்சிக்கான, எந்த
வாய்ப்பையும் வழங்காது.
*அமைதியான மனம்
அனைத்தையும் வழங்கும்*
No comments:
Post a Comment