Saturday, 14 September 2024

 ஒருவித பரவச நிலை 

உங்களிடம் இருக்கும் 

மகத்தான சக்திகள் எல்லாம் '

குழப்பத்திலும்,

வெட்டியாக போரிடுவதிலுமே 

விரயமாகி விடுகிறது.

நீங்கள் யாருடன் போரிடுகிறீர்கள் ?

உங்களது கெளரவத்தை காப்பாற்றிக் கொள்வதாக நினைத்து

யாரிடம்  நீங்கள் சண்டையிட்டாலும்,

உண்மையில் நடப்பது என்ன ?  என்று சற்று நிதானமாக சிந்தித்துப் பாருங்கள்.

உங்களையே இரண்டு பகுதிகளாக பிரித்துக் கொண்டு,

ஒரு பகுதியை 

மற்றொரு பகுதியுடன் 

மோத விடுகிறீர்கள்.

சண்டையில் விரயமாகும்

அதே சக்தியை,

ஒத்த இசைவுடன்

 பயன் படுத்தினால்,

ஒருவித பரவச நிலையை அடைவீர்கள்.

நீங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று

ஒரு முடிவுக்கு வந்து விடாதீர்கள்.

அது ஆபத்தானது.

உங்கள் ஆன்மாவிற்கு 

அந்த  ' வரையறை '

விஷம் போன்றது.

சாதாரணமாக இருங்கள்.

பிரபலமாக ஆக வேண்டும் என்று ஆசை படாதீர்கள்.

அப்படி பிரபலமான புகழ்

இயற்கையாக உங்களுக்கு கிடைத்தாலும்,

சூழ்நிலைக்கு மயங்கி விடாதீர்கள்.

சாதாரணமாக

 மனநிலையை அமைதியாக  வைத்துக் கொள்ளுங்கள்.

அப்போதுதான்,

உங்களது வாழ்க்கையை

இன்பமாக அனுபவிக்க 

உங்களிடம் தேவையான சக்தி இருக்கும்.

இயற்கையை முழுதாக நம்பி

அது எங்கே நம்மை நடத்திச் செல்கிறதோ,

அதன்படி வாழ்ந்தாலே போதுமானது.

ஆனால்,

நமக்கோ இயற்கையை 

பின் தொடர்ந்து செல்ல பயமாக இருக்கிறது.

நமக்கு ஒழுக்கத்தை போதிக்கிறேன்,

கெளரவத்தை போதிக்கிறேன் ' என்று

நமது வழி காட்டல் கள்

இயற்கையையே

 நமக்கு வில்லனாக்கி விட்டார்கள்.

இயல்பு நிலையில்,

விழிப்புணர்வோடு இருப்பவர்களுக்கு மட்டுமே நான்

 சொல்ல வந்ததின் உண்மையான அர்த்தம் புரியும்.

எந்த சூழ் நிலையிலும்,

' இங்கு நாம் செய்ய வேண்டியது என்ன ? ' என்றுதான்

 தன் முனைப்புடன் 

சண்டை போடுவதற்கு தயாராக நிற்கிறோம்.

வாழ்க்கையின் ஆனந்தத்தை இழந்து நிற்கிறோம்.

No comments:

Post a Comment