Monday, 2 September 2024

வானமே வீடாக!

 வானமே வீடாக! பேசாலைதாஸ்

இந்த உலகம் பயனுள்ளவைகளை நோக்கியே ஓடிக்கொண்டிருக்கிறது.அதனால்தான் தியானம் பயனற்றதாக உள்ளது.

ஆனால் பயனுள்ளவைகளுக்கு பயனற்றதே ஆதாரம்.

தூக்கம் பயனற்றது.அதனால் எதுவும் கிடைக்காது.ஆனால் மறுநாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்க அந்த பயனற்றது தேவையாக உள்ளது.

பலன்களை எதிர்பார்த்து சிலர் என்னிடம் கேட்பார்கள் தியானத்தால் என்ன பலன் என்று.அவர்களிடம் நான் சொல்வது ஒரு பலனும் இல்லை.தியானம் உங்களுக்கு எதுவும் தராது.ஆனால் அது ஓய்வு.நீங்கள் பயனற்றவைகளை செய்யும் போது மிகவும் புத்துணர்ச்சியுடனும்,ஓய்வுத்தண்மையுடனும் காணப்படுவிர்கள்.

நிலவை ரசிப்பது.தோட்டம் வளர்ப்பது போன்றவைகள். ஒரு குழந்தை விளையாடினால் அதை தடுத்து அந்த நேரத்தில் ஏதாவது பயனுள்ளவைகளை செய்யச்சொல்லுவார்கள்.எல்லோரும் அறிவியலாளர் ஆகிவிட்டால் பிறகு யார் புல்லாங்குலழ் இசைப்பது.ஓவியம் வரைவது?

நாட்டில் உணவு பஞ்சம் வந்ததால் மன்னன் உத்தரவிட்டான்.முதியவர்கள் அனைவரையும் கொன்றுவிடுங்கள்.அவர்கள் பயனற்றவர்கள். அவர்களுக்கான உணவு தேவையற்ற விரயம். எல்லா முதியவர்களும் கொல்லப்பட்டார்கள்.

சிறிது காலம் கடந்துவிட்டது.இப்பொழுது ஒரு புது நோய் ஒன்று நாடு முழுவதும் பரவியது.மன்னன் அமைச்சரிடம் கேட்டான் என்ன செய்வது? அமைச்சர் சொன்னார் இதற்கு மருந்து ஒரு முதியவருக்கு மட்டும்தான் தெரியும் ஆனால் நாம் அவரை கொன்றுவிட்டோம்.

மன்னன் சொன்னான் அவர் வீட்டில் வேறு யாருக்காவது தெரிந்திருக்கும்.அழைத்து வாருங்கள்.ஆச்சர்யம் அந்த முதியவரே வந்துவிட்டார்.

மன்னன் கேட்டான் இது எப்படி? 

முதியவர் சொன்னார்...வீரர்கள் என்னை கொல்ல வரும் போது.பயனுள்ள நெல் மணிகளை கீழே கொட்டிவிட்டு அந்த குதிருக்குள் பயனற்ற என்னை ஒழித்துவைத்துவிட்டான் என்னுடைய பேரன்.

எவையெல்லாம் பயனற்றவைகள் என்று நீங்கள் கருதிக்கொண்டிருக்கிறீர்களோ அவைகள்தான் உங்களுக்கு புத்துணர்ச்சியையும்,மகிழ்ச்சியையும்,நன்மையும் தருகிறது.

தியானம் உங்களின் இயல்பு தன்மைக்கு அழைத்துச்செல்கிறது. உங்கள் வீட்டிற்கு அழைத்துச்செல்கிறது.

இரவு ரோந்துப்பணியில் காவலர்கள் சுற்றிவந்தார்கள்.இவர்கள் பயனுள்ளவைகளின் பாதுகாவலர்கள்.

இரண்டு இளைஞர்கள் சாலையில் நின்று வானத்தையும் நட்சத்திரங்களையும் ரசித்துக்கொண்டிருந்தார்கள்.உண்மையில் இவர்கள் பாதுகாக்கப்படவேண்டியவர்கள்.இவர்கள்தான் இந்த பூமிக்கு ஒரு அழகை தருகிறார்கள்.

ஆனால் மாறாக காவலர்கள் அவர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்து நீதிபதி முன் நிருத்தினர்.

நீதிபதி முதல் இளைஞனிடம் கேட்டார்.உன் வீடு எங்கே உள்ளது?அவன் சொன்னான் வானம் கூரை இந்த பூமிதான் என் வீடு.

நீதிபதிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.சற்று குழப்பமாக இரண்டாவது இளைஞனிடம் கேட்டார் உன் வீடு எங்கு உள்ளது? 

அவன் சொன்னான்..இவன் வீட்டுக்கு பக்கத்துவீடு.

No comments:

Post a Comment