Saturday, 7 September 2024

இரண்டாவது புத்தர்

இரண்டாவது புத்தர்   பேசாலைதாஸ்

லைதாஸ்கெளதம் புத்தரின் 

சீடராக இருந்தவர் அவர்.

அவர்களுக்குள்,

பல கோணத்தில்,

பல அர்த்தங்கள் பொதிந்திருந்தன.

புத்தருக்கு 10000 சீடர்கள்.

அவர் எங்கு சென்றாலும்,

அவர்களும் அவரை 

பின் தொடர்ந்து செல்வார்கள்.

இன்று யார் ஞானமடையப் போகிறார்கள் என்பது

புத்தருக்கே தெரியாது.

ஒவ்வொறு நிகழ்வும்,

ஏதாவது ஒரு சீடனின் 

ஞான கதவை திறந்து 

விட்டு விடும்.

அன்று ஒரு நாள் 

அதிகாலை நேரம்.

புத்தர் தன் கையில் 

ஒரு தாமரை மலருடன் மரத்தடியில் அமர்ந்திருந்தார்.

அவரது உபதேசத்தை கேட்பதற்காக அனைவரும் அங்கு ஆவலுடன் கூடியிருந்தார்கள்.

நேரம் சென்று கொண்டேயிருந்தது.

புத்தர் எதுவும் பேசாமல்,

அந்த மலரையே பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தார்.

புத்தர் இதற்கு முன் இப்படி இருந்தது கிடையாது.

வந்ததும்,

 உடனே  அருள் உபதேசத்தை தொடங்கி விடுவார்.

இன்று அத்தனை சீடர்களையும் மறந்து விட்டது போலவும்,

தனிமையில் இருப்பதுபோல்

நினைத்துக் கொண்டு,

மெளனமாக, 

அந்த மலரை பார்த்தபடியே அமர்ந்திருந்தார்.

எவ்வளவு நேரம்தான் சீடர்கள் அதே நிலையில்

அமர்ந்திருப்பார்கள்.

சூரியன்,

வானத்தின் உச்சிக்கு 

வந்து விட்டான்.

அப்போது,

கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒரு சீடன் மட்டும் ' சப்தமாக '

சிரிக்க ஆரம்பித்து விட்டான்.

அனைவரும் அவனை பார்த்தனர்.

அனைத்து சீடர்களும்,

உச்சி வெயிலில் உலர்ந்து

கொண்டிருந்த போது,

அவன் மட்டும்,

தன்னை மறந்து ஆனந்தத்தில் சிரித்துக் கொண்டிருந்தான்.

அவனது சிரிப்பை 

அவனாலேயே

அடக்க முடியவில்லை.

அவனை,

 அங்குள்ள சீடர்கள் அனைவருக்கும் தெரியும்.

அவன்,

 ஒரு நிழலை போல அமைதியானவன்.

அவன்,

அந்த சீடர்கள் கூட்டத்தில் இருப்பது போலவே எவருக்கும் தெரியாது

இதற்கு முன் அவன் 

இப்படி வித்தியாசமாக நடந்து கொண்டதில்லை.

சற்று நேரம் வரையில்,

அவனது பலத்த சிரிப்பு

ஒலித்துக் கொண்டிருந்தது.

புத்தர் அந்த சீடனை தன் அருகில் அழைத்தார்.

' காஷ்யப்,

என்னருகில் வா '

தன் அருகில் வந்த அந்த சீடனுக்கு,

தனது கையிலிருந்த மலரை 

கொடுத்தார்.

' காஷ்யப்,

எவற்றையெல்லாம்

வார்த்தைகளால் கொடுக்க முடியுமோ, 

அவைகள் அனைத்தையும்

மற்றவர்களுக்கு கொடுத்து விட்டேன்.

வார்த்தைகளால் 

சொல்லி கொடுக்க  முடியாத 

பல செய்திகள் இருக்கின்றன.

அவைகள் அனைத்தையும்

நான் இப்போது உனக்கு  தருகிறேன். ' என்றார்.

ஒரு மலர்.

மலர் என்பது ஒரு அடையாளம்தான்.

புத்தரின் இருப்புணர்வு

மஹா காஷ்யப் பிடம் 

இடம் பெயர்ந்து விட்டது.

அதை ' மஹா காஷ்யப் ' பிடம்

கொடுத்து விட்டு,

'அனைத்தையும் உனக்கு கொடுத்திருக்கிறேன் '

என்றார் புத்தர்.

மஹா காஷ்யப்,

இன்றுவரை 

இரண்டாவது புத்தர் என்று அழைக்க படுகிறார்.

No comments:

Post a Comment