மனதின் பிரதிபலிப்பு பேசாலைதாஸ்
கோடீஸ்வரர் ஒருவர் முகம் பார்க்கும் கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட அறை ஒன்றை கட்டினார். அந்த அறைக்குள் யார் நுழைந்தாலும் நூற்றுக் கணக்கான பிம்பங்களாக அவரது வடிவம் தெரியும். ஒருமுறை, அவர் வளர்த்து வந்த நாய் ஒன்று அந்த அறைக்குள் நுழைந்து விட்டது.
சுற்றிலும் பார்வையை செலுத்தி திகிலடைந்து விட்டது. சுற்றிலும் ஒரே நாய் கள் கூட்டம். அவைகள் வெவ்வேறு நாய்கள் என்று நினைத்து குரைக்க ஆரம்பி த்து விட்டது. அதை சுற்றியுள்ள நாய்களும் ஒன்று சேர்ந்து குரைக்க ஆரம்பித்து விட்டன. நாய் ஒன்றே ஒன்றுதான்.
அனைத்தும் அந்த நாயின் பிம்பம் தான். நாயுடன் சண்டையிட ஆரம்பித்து விட்டது. ஒவ்வொறு நாயின் மேல் மோதும் போதும் அது முகத்தில் அடிபட்டு கீழே விழுந்தது. முகத்தின் வலி குறையாமலும், மனதின் பயம் போகாமலும் அது மோதிக் கொண்டே இருந்தது. உங்களுக்கும் இதுதான் நிகழ்ந்து கொண்டி ருக்கிறது.
உண்மையோ ஒன்றுதான். ஆனால், மனதின் பிரதிபலிப்பு அதிகம். மாறுவதும், பயமுறுத்துவதும் அனைத்தும் மனதின் செயலே. நீங்கள் அமைதியாக இருந் தால், உங்களை சுற்றியுள்ள அனைத்தும் அமைதியாகி விடும்
.jpg)
No comments:
Post a Comment