Thursday, 19 December 2024

' ஏற்றுக்கொள்ளுதல் '

' ஏற்றுக்கொள்ளுதல் '

" நீங்கள் வாழ்வதை விரும்புகிறீர்கள்.

ஆனால்,

வாழ்க்கையில்

உயிரற்ற பொருட்களை தான்

அதிகம் விரும்புகிறீர்கள்.

அதனோடு தான் வாழ்வதற்கு ஆசை படுகிறீர்கள்.

அதனால்தான்,

பொருட்களை, 

பணத்தை

மேலும் மேலும் சேகரித்து கொண்டே போகிறீர்கள்.

 உயிரற்ற பொருட்களோடு வாழ்வது உங்களுக்கு மிகவும் எளிதானது.

உயிருள்ள மனிதர்களோடு வாழ்வது மிகவும் சிரமமாக உள்ளது.

ஒரு உயிரோடு நீங்கள் 

வாழவேண்டும் என்று

நினைத்தால்,

முதலில் நீங்கள் செய்வது,

அந்த உயிரை

 ஒரு பொருட்டாக நினைக்காமல்,

ஒரு பொருளாக மாற்றி விடுவதுதான்.

அதற்கு நல்ல உதாரணம்,

உங்களது மனைவி.

உங்களுடன் வாழ்வதற்கு அவர்கள் ஒரு இயந்திரமாக மாறிவிட வேண்டும்.

பகலில் மட்டுமல்ல,

இரவிலும் அவர்களை 

ஒரு பொருளாகக் தான் பார்க்கிறீர்கள்.

உங்களது குழந்தையையும்

இயந்திரமாக தான் 

மாறி விடுகிறது.

அவர்கள் மனிதர்கள் அல்ல.

நேரப்படி இயங்கும் 

ஒரு இயந்திரம்.

' வாழ்க்கையின் வடிவமைப்பு அப்படி !

வேறு என்னதான் செய்வது ?'

என்று உங்களது மனம்

 ஒரு சமாதானத்தை உங்களிடம் சொல்லி விடுகிறது.

நீங்களும் அதனுடன் சமாதானம் ஆகி விடுகிறீர்கள்.

அதனால்தான்,

இயற்கை 

உங்கள் வாழ்க்கை முறையில்,

ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினால்,

உடனடியாக உங்களால் அதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.

இப்போது உள்ள பாதுகாப்பான சூழ்நிலை போய்விடுமோ என்று 

மனம் பதைக்கிறீர்கள்.

வாழ்க்கை என்பது, மாறுதலுக்கு

 உட்பட்டது தான்.

அதில் மாற்றுக் கருத்து கிடையாது.

அப்படி

மாறுவதால் தான்,

நீங்கள் 

இயந்திர தனத்திலிருந்து தற்காலிகமாக விடுபட்டு கொஞ்சமாவது வாழுகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உண்மையான

 வாழ்க்கை என்பது,

' பாதுகாப்பு அற்றது '

வாழ்க்கையின் உயிரோட்டமே,

அந்த பாதுகாப்பற்ற தன்மையில் தான் இருக்கிறது.

' பாதுகாப்பாகக் தான் 

இருக்க வேண்டும் ' என்று நினைத்தால்,

இயந்திரத்தனமான வாழ்க்கை ஒன்றுதான் 

ஒரே வழி. 

' பாதுகாப்போடு தான் வாழ்கிறோம் ' என்ற

மன மாயையுடன்

 வாழ வேண்டியதுதான். " 

No comments:

Post a Comment