உள் உணர்வே உண்மையானது பேசாலைதாஸ்
ஒரு புதிய கோவிலின் வாசலுக்காக வரைபடம் தயாரிக்கும் படி ஒரு புத்தமத துறவிக்கு உத்தரவிடப்ப ட்டது. அவர் பல வரைபடங்களைத் தயாரித்தார். மிகவும் திறமைவாய் ந்த ஒரு சீடன் அவருக்கு இருந்தான். அவர் அவனை தன்னுடனேயே இரு க்கும்படிக் கூறினார்.
அவர் வரைபடத்தை உருவாக்குகை யில் சீடன் பார்த்துகொண்டே இருக் கவேண்டியதுதான், அதை அவன் விரும்பினால், அது சரி, நன்றாயிருக்கிறது என்று சொல்லவேண்டும். அவனுக்குப் பிடிக்கவில்லையென்றால், இல்லை என்று சொல்லவேண்டும்.
மேலும் குரு – நீ சரி என்று சொல்வதை மட்டுமே நான் அனுப்ப போகிறேன். நீ சரியில்லை என்று சொல்வதையெல்லாம் நான் தவிர்த்துவிட்டு மீண்டும் மீண்டும் புதிய வரைபடத்தை நான் உருவாக்குவேன் – என்றார்.
நூற்றுக்கணக்கான வரைபடங்கள் இப்படி ஒதுக்கப்பட்டன. மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. குருவிற்கே பயம் வர ஆரம்பித்து விட்டது, ஆனாலும் கொடுத்த வார்த்தையை காப்பாற்ற வேண்டும். குரு படம் வரைவார். சீடன் பார்த்துக்கொண்டிருப்பான், சரியில்லை என்பான். குரு மறுபடியும் ஒன்றை வரைய ஆரம்பிப்பார்.
ஒருநாள் பேனா மை முடியப்போகிறது, ஆகவே குரு – போய் பேனா மை கொண்டுவா – என்றார். அந்த சீடன் வெளியே போனான், குரு அவனை, அவனது இருத்தலை மறந்து முயற்சியற்றவரானார், அவனது இருத்தலே பிரச்சனை.
சீடன் உடனிருக்கிறான், பார்த்துகொண்டிருக்கிறான் என்ற எண்ணம் குருவின் மனதில் இருந்துகொண்டே இருந்தது. அவன் இதை விரும்புவானா. மாட்டானா, இதையும் நிராகரித்து விடுவானா என்று தொடர்ந்து நினைத்துக்கொண்டேயிருந்தார். இது உள்ளே ஒரு பதட்டத்தை ஏற்படுத்திவிட்டது., ஆகவே அந்த குருவால் இயல்பாக இருக்க முடியவில்லை.
அந்த சீடன் வெளியே போனான். வரைபடம் முடிந்துவிட்டது. சீடன் உள்ளே திரும்பிவந்து – அபாரம். ஆனால் இதை ஏன் முன்பே வரையவில்லை – என்றான்.
குரு – இப்போதுதான் ஏனென்று எனக்கே புரிந்தது. நீ இருந்ததனால்தான். நீ இருந்ததால், நீ சரியென்று சொல்ல வேண்டுமென முயற்சித்தேன். அந்த முயற்சிதான் முழுவதையும் கெடுத்துவிட்டது. நான் இயல்பாக இருக்க முடியவில்லை, நான் கரைய முடியவில்லை, நீ இருந்ததால் நான் என்னை மறக்க முடியவில்லை.- என்றார்.
நீங்கள் தியானம் செய்யும் பொழுதெல்லாம், நீங்கள் அதைச் செய்யும் முயற்சியே, நீங்கள் அதில் வெற்றிபெற நினைக்கும் நினைப்பே, தடைதான்.பொறுமையுடன் இருந்தால் ஒரு நாள் வரும், முயற்சியற்ற ஒருநாள் வரும். அப்போது உண்மையில் நீ அங்கிருக்க மாட்டாய், வெறும் தியானம் மட்டுமே அங்கிருக்கும்.
No comments:
Post a Comment